Saturday, March, 31, 2012
இந்தியாவின் டாப் கமர்ஷியல் இயக்குநர் எனப்படும் ஷங்கர் மீண்டும் நடிகர் விக்ரமுடன் இணைகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
நண்பன் படத்துக்குப் பிறகு, புதிய படத்துக்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார் ஷங்கர். இந்தப் படத்தில் நடிப்பவர்கள் குறித்து அவர் இதுவரை எதுவும் கூறவில்லை.
ஹீரோ குறித்து அதிகாரப்பூர்வமாக ஷங்கர் கூறாவிட்டாலும், விக்ரம்தான் இந்தப் படத்தில் நடிப்பார் என்ற பேச்சு அடிபட ஆரம்பித்துள்ளது. தாண்டவம் படம் முடிந்த பிறகு, ஷங்கரின் படத்தில் நடிப்பார் விக்ரம் என்கிறார்கள்.
ஷங்கரும் விக்ரமும் ஏற்கெனவே அந்நியன் படத்தில் இணைந்துள்ளனர்.
ஷங்கருக்கு ஆரம்பத்தில் பாலகுமாரன் எழுதினார். பின்னர் சுஜாதா பல படங்களுக்கு வசனம் எழுதினார்.
சுஜாதாவுக்குப் பிறகு, மதன் கார்க்கி இரு படங்களில் ஷங்கருடன் இணைந்து எழுதினார். இப்போது எழுத்தாளர்கள் 'சுபா' (சுரேஷ் - பாலகிருஷ்ணன்) ஷங்கருக்கு எழுதுகின்றனர்.
கேவி ஆனந்த் படங்களுக்கு ஆஸ்தான எழுத்தாளர்கள் இந்த சுபா தான்!

Comments
Post a Comment