
தமிழ் சினிமாவில் ரவுடி சப்ஜக்ட் என்றாலே கேமராக்கள் கேட் பண்ணும் இடம் வட சென்னை தான். ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் வட சென்னை ரவுடிசம் நிறைந்த இடம் அல்ல என்பதை விளக்கும் வகையிலும் சில திரைப்படங்கள் உருவாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் உருவாகும் புதுப்படம் தான் 'பொழுது போக்கு.'
வட சென்னை என்றால் ரவுடியிசம், அராஜகம் என்கிற எண்ணத்தை மாற்றும் வகையில் அங்கு வாழும் நான்கு இளைஞர்களின் கலகலப்பான எதார்த்தமான வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக 'பொழுது போக்கு' வளர்கிறது.
முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தை, புதுமுக இயக்குநர் ஏ.சரவணகுமார் இயக்குகிறார். கே.எஸ்.கோபி ஒளிப்பதிவு செய்கிறார். ஹார் மோனி இசையமைக்கிறார்.
இப்படத்தில் ஐந்து பாடல்கள் இடம்பெறுகிறது. இரண்டு பாடல்கள் சென்னையிலும், மூன்று பாடல்களை வெளிநாட்டிலும் படமாக்க திட்டமிட்டிருக்கின்றனர். சென்னை, வட சென்னை, தரமணி, புதுப்பேட்டை மற்றும் கோவா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற இருக்கும் 'பொழுது போக்கு' படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இப்படத்தின் துவக்க விழா இன்று (மார்ச் 22) பூஜையுடன் சென்னை, ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
Comments
Post a Comment