Wednesday,March,28,2012
டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன், ஜீவா-சமந்தாவை வைத்து இயக்கி வரும் புதிய படம் "நீ தானே என் பொன் வசந்தம்". அட்டகாசமான லவ் ஸ்டோரியாக உருவாகி வரும் இப்படத்திற்கு இசைஞானி இளையாராஜா இசையமைத்து வருகிறார். வழக்கமாக கவுதம் தன்னுடைய படங்களுக்கு ஹாரிஸ், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரை வைத்து தான் இசையமைப்பார். ஆனால் இம்முறை முதன்முறையாக இளையராஜாவுடன் கை கோர்த்து உள்ளார். இளையராஜாவின் தீவிர ரசிகரான கவுதம், அவரது இசையமைப்பில் தன்னுடைய படம் இருக்க வேண்டும் என்று ரொம்ப நாளாக ஆசைப்பட்டு வந்தார். அது இப்போது தான் நனவாகி இருக்கிறது.
இந்நிலையில், இப்படத்தின் இசைகோர்ப்பு லண்டனில் நடந்து வருகிறது. இதற்காக இளையராஜா, கவுதம் மேனன் ஆகியோர் லண்டனில் முகாமிட்டுள்ளனர். எப்பவும் வெண்ணிற ஆடையை மட்டுமே அணியும் இசைஞானி, இப்போது முதன்முறையாக கோட்-சூட்டு எல்லாம் அணிந்து ரொம்பவே வித்தியாசமாக, அதுவும் அமர்களமாக காணப்படுகிறார். எப்பவும் வெள்ளை நிற ஆடையை அணியும் இளையராஜா, இப்போது கோட்-சூட்டுடன் வித்தியாசமாக காணப்படுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Comments
Post a Comment