
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8 மணிக்கு ”நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” என்ற தலைப்பில் நடிகர் சூர்யா நடத்தும் ஒரு கோடிக்கான கேம் ஷோ ஒன்று ஒளிபரப்பாகிறது.
இதில் அவ்வளவு எளிதில் விடை கண்டுபிடிக்க முடியாத அறிவுப்பூர்வமான(!) பல கேள்விகள் தினமும் கேட்கப்படுகின்றன. சூர்யா ஒரு நடிகன் என்பதை ஒதுக்கிவிட்டு அனைத்து ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை ரசித்து பார்க்கின்றனர். நிகழ்ச்சியில் மற்ற நடிகர்களைப் பற்றிய கேள்விகள் வரும் போது சூர்யாவிடம் அவர்களை பற்றி பேச மக்கள் சிறு தயக்கம் காட்டுகின்றனர்.
ஆனால் சூர்யா சாதாரணமாக அவர்களை பற்றி பேசுகிறார். அஜித், விஜய் ஆகியோரைப் பற்றி சூர்யா இந்நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். “ திருமணத்திற்குப் பிறகு புதுமணத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிக்கு பெயர் என்ன?” என்று சூர்யா கேட்ட போது நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தலை தீபாவளி என்பதை தல தீபாவளி என்று மாற்றி(எப்புடியெல்லாம் ட்விஸ்ட் பண்ணுறாங்க பாருங்க) ”உங்க முன்னாடி எப்படி தல பற்றி பேசுவது” என்று கேட்டார்.
அதற்கு சூர்யா “ஓ நீங்க அப்படி வர்றீங்களா. தல எப்பவுமே தல தாங்க” என்று கூறினார். மற்றொரு நாள் நடந்த நிகழ்ச்சியில் ”நண்பன் திரைபடத்தில் வரும் பிரபலமான ஆங்கில வசனம் எது?” என்று கேட்டார். நண்பன் படம் விஜய் நடித்த படம் என்பதால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர் சூர்யாவிடம் “விஜய் நல்லவரா? கெட்டவரா?” என்று கேட்டார்.
அந்த கேள்விக்கு சூர்யா “அவர் ஏன் கெட்டவரா இருக்கனும். அவரது படங்களை பார்த்து நான் பிரம்மித்துள்ளேன். கல்லூரியிலிருந்தே அவரது வளர்ச்சியை பார்த்துக் கொண்டிருப்பவன் நான். எனது ”அகரம் பவுண்டேஷனு”க்காக ஒரு குறும்படத்தில் நடிக்க அவருக்கு போன் செய்து கேட்ட போது ”அதுக்கென்ன மாமா பன்னிடலாம் மாமா” என்று கூறினார்.
அவருடைய காமெடியும், தன்னம்பிக்கையும் தான் அவரிடம் எனக்கு பிடித்தது” என்று பதிலளித்தார். அதன் பின் அந்த கேள்விக்கு மிகவும் யோசித்து(!) சரியான பதில் சொல்லப்பட்டது.
Comments
Post a Comment