பிரிவுக்கு காரணம் என்ன? திருப்பதி கோயிலில் நயன்தாரா உருக்கம்: பக்தர்களுடன் வரிசையில் நின்று திருப்பதி கோவிலில் வழிபாடு!!!

Thursday, March 22, 2012
நடிகை நயன்தாரா-பிரபுதேவாவை தீவிரமாக காதலித்தார். அவரை திருமணம் செய்வதற்காகவே சினிமாவுக்கு முழுக்கு போட்டார். கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். திருமணத்துக்கு நாள் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் கருத்து வேறுபாடுகளால் பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் இடையேயான காதல் முறிந்தது.

இதனால் மீண்டும் சினிமாவில் நடிக்க நயன்தாரா முடிவு செய்தார். சில புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்து உள்ளார்.இந்த நிலையில் நயன்தாரா நேற்று குடும்பத்தினருடன் திருப்பதி வந்தார்.

ஏழு மலையான் கோவிலில் நயன் தாரா வழிபட்டார். நெற்றியில் சந்தனம், குங்கும பொட்டு வைத்திருந்த நயன்தாரா வைகுண்டவாசல் வழியாக கோவிலுக்குள் சென்றார். பக்தர்களுடன் பக்தராக வரிசையில் நின்றார்.
சுமார் 30 நிமிடம் வரிசையில் காத்து இருந்தார்.

நயன்தாராவை பார்த்ததும் பக்தர்கள் மகிழ்ச்சியாக ஆரவாரம் செய்தனர். சிலர் அவருடன் கைகுலுக்கினர். அவர்களுடன் நயன்தாரா சிரித்து பேசினார். மூலஸ் தானத்தில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுக்கு இடையே நயன்தாரா ஏழுமலையானை பயபக்தியுடன் தரிசித்தார்.பின்னர் உண்டியலில் காணிக்கை செலுத்தினார்.

திருப்பதி கோவிலுக்கு வந்தது குறித்து நயன்தாரா கூறியதாவது:-

நான் முதன்முறையாக ஏழுமலை தரிசனம் செய்கிறேன். அவரின் அருளும், ஆசியும் பெற வந்தேன். இது எனக்கு மனநிறைவையும், சந்தோஷத்தையும் தருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம், பிரபுதேவாவுடன் உங்கள் காதல் முறிந்தது ஏன்? என்று நிருபர்கள் கேட்டனர்.

நடிகர் பிரபுதேவாவுடன் பிரிவுக்கு காரணம் என்ன என நிருபர்கள் கேட்டபோது, நடிகை நயன்தாரா கண் கலங்கினார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நடிகை நயன்தாரா நேற்று வந்தார். ரூ.300க்கான சிறப்பு தரிசன டிக்கெட்டில் சுவாமியை தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறுகையில், நீண்ட நாட்களுக்கு பிறகு சாமியை தரிசனம் செய்தது மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. மனதில் இருந்த பாரம் எல்லாம் நீங்கியது போல் உணர்கிறேன் என்றார்.

பிரபுதேவாவுக்கும், உங்களுக்கும் இடையே விரிசல் ஏற்பட காரணம் என்ன என நிருபர்கள் கேட்டபோது, கோயிலில் இந்த மாதிரி கேள்வியை கேட்காதீர்கள் என்று கூறி கண் கலங்கினார்.
அவருடன் வந்த உதவியாளர் கூறுகையில், சிவன் கோயிலில் பிரபுதேவாவும், பெருமாள் கோயிலில் நயன்தாராவும் தரிசனம் செய்யுமாறு ஜோசியர்கள் அறிவுறுத்தியிருந்தனர். அதனால் இருவருக்கும் நல்லது நடக்கும் என்று கூறியிருந்தனர். அதன்படி இருவரும் தரிசனம் செய்துள்ளனர் என்றார்.

இந்த தகவலால் பிரபுதேவா நயன்தாரா பிரிந்துவிட்டனர் என்ற பரபரப்புக்கு தற்போது முடிவு கிடைத்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். அதே நேரம், பிரபுதேவாவுடன் திருமணத்துக்கு தயாரானபோது படங்களே ஒப்புக்கொள்ளாமல் சின¤மாவுக்கு முழுக்கு போட இருந்தார் நயன்தாரா. ஆனால் இப்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் 4 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவர்கள் பிரிந்துவிட்டது உண்மைதான் என திரையுலகினர் கூறுகின்றனர்.

Comments