ராணி ருத்ரமா தேவி வேடத்துக்கு நயன்தாரா - அனுஷ்கா கடும் போட்டி!!!

Friday, March 2, 2012
ஆந்திராவில் ஆட்சி புரிந்த ராணி ருத்ரமா தேவியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இதில் நடிக்க நயன்தாரா, அனுஷ்கா இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட வீரப் பெண் ஜான்சி ராணியை போல் தென்னிந்தியாவில் புகழ்பெற்றவர் ராணி ருத்ரமா தேவி. இவரது வீர, தீர செயல்களை பின்னணியாகக் கொண்டு பீரியட் படம் இயக்குகிறார் தெலுங்கு இயக்குனர் குண சேகர். இந்த படத்தில் ராணி வேடத்தில் நடிக்க அனுஷ்காதான் படக்குழுவின் முதல் சாய்ஸாக உள¢ளார். இது பற்றி அனுஷ்காவிடம் பேசப்பட்டது. தமிழில் விக்ரமுடன் தாண்டவம், சூர்யாவுடன் சிங்கம் 2, கார்த்தியுடன் சுராஜ் இயக்கும் படம் என அனுஷ்கா பிசியாக உள்ளார். அதே நேரம், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள வேடம் என்பதால் ராணி ருத்ரமா தேவி படத்தில் நடிக்கவும் அவர் விரும்புகிறார். இதனால் கால்ஷீட்டை அட்ஜஸ்ட் செய்து இப்படத்தில் நடிப்பது பற்றி அறிவிக்கிறேன் என அனுஷ்கா கூறி உள்ளாராம். இதற்கிடையே இப்படத்தில் நடிக்க தயாரிப்பு நிறுவனத்துக்கு மறைமுகமாக தூது விட்டுள்ளாராம் நயன்தாரா. பிரபுதேவாவுடன் காதல் முறிந்த பின் சினிமாவில் மீண்டும் முழு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் நயன்தாரா. இதனால் இப்படத்தில் நடித்தால் மீண்டும் தனது பழைய மார்க்கெட்டை பிடிக்கலாம் என்பது அவரது கணிப்பு. எனவே ராணி வேடத்தில் நடிக்க அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அருந்ததி படத்தில் நடித்ததால், ராணி வேடம் அனுஷ்காவுக்கு பொருந்தும் என குணசேகர் கருதியுள்ளார். சமீபத்தில் சீதை வேடத்தில் நயன்தாரா நடித்திருப்பதால் அவருக்கும் இந்த வேடம் பொருந்தும் என திரையுலகினர் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம், அனுஷ்கா நடிப்பதாக கூறியுள்ள படத்துக்கு நயன்தாரா தூது விட்டிருப்பதால் இருவருக்குமிடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இது மோதலாக மாறும் சூழலும் உருவாகியுள்ளது.

Comments