'சாவதற்கு முன்பு எனது அழகை ரசித்தார் வினோத்குமார்': அல்போன்சா!!!

Tuesday, March 06, 2012
சென்னை::எனது காதல் நிஜமானது. வினோத் குமார் எடுத்த முடிவு எதிர்பாராதது. சாவதற்கு முன்பு என்னை விதம் விதமாக ஆடைகள் கட்டி வரச் சொல்லி எனது அழகை ரசித்தார். நான் கடைசியாக சேலையில் அவர் முன்பு வந்து நின்றபோது அதையும் ரசித்தார். பிறகுதான் அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்று நடிகை அல்போன்சா கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடன நடிகையாக வலம் வந்தவர் அல்போன்சா. பாட்ஷா, பஞ்சதந்திரம், ஸ்ரீ உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியுள்ளார். இவர் கேரளாவைச் சேர்ந்தவர். இவரது தம்பிதான் நடன மாஸ்டர் ராபர்ட்.

இவருக்கு ஏற்கனவே துபாயைச் சேர்ந்த ஒருவருடன் கல்யாணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இருப்பினும் தற்போது கணவரைப் பிரிந்து விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருகிறார் அல்போன்சா.

இவரது தம்பி ராபர்ட் மூலம் சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்பவர் பழக்கமானார். நடனம் கற்க வந்த வினோத்குமார், அல்போன்சாவுடன் காதலில் விழுந்தார். இருவரும் ஆரம்பத்தில் நட்புடன் பழகி பின்னர் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் அளவுக்கு தீவிரக் காதலில் விழுந்து விட்டனர். கடந்த ஒரு வருடமாக இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனராம்.

இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு தூக்கில் தொங்கிய நிலையில் அல்போன்சா வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார் வினோத்குமார். இது தற்கொலை என அல்போன்சா கூறுகிறார். ஆனால் வினோத்குமாரின் குடும்பத்தினர் இது கொலை, அல்போன்சாவும், அவரது தம்பி ராபர்ட்டும் சேர்ந்து வினோத்குமாரை அடித்துக் கொலை செய்து விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இதை சந்தேக மரணம் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வினோத்குமாரின் தந்தை பெயர் பாண்டியன். இவர் திருக்கழுக்குன்றம் நகர எம்ஜிஆர் பேரவை செயலாளராக இருக்கிறார்.

இந்த நிலையில், காதலர் மரணம் குறித்து அல்போன்சா போலீஸாரிடம் சில தகவல்களைக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

நானும், வினோத்குமாரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்தோம். எனது சகோதரர் ராபர்ட்ராஜ், வினோத்குமாருக்கு நெருங்கிய நண்பர். அவரிடம் நடனம் கற்றுக்கொள்ள வினோத் வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. அவர்தான் முதலில் காதலை சொன்னார்.

எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி, ஒரு குழந்தை இருந்ததால், முதலில் அவரது காதலை ஏற்க தயங்கினேன். எனது வீட்டில் இந்த காதலை ஆதரித்தார்கள். முதல் கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. அதற்கு ஒருவருட காலம் பிரிந்து வாழவேண்டும் என்று எனது வக்கீல் சொன்னார். இதனால் எனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து ஒரு வருடத்துக்காக காத்திருந்தோம்.

இந்த நிலையில் என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வினோத் விரும்பினார். என்னை சினிமாவில் நடிக்கக்கூடாது என்று கண்டிசன் போட்டார். துபாய்க்கு நடன நிகழ்ச்சி நடத்த போகக்கூடாது என்று சொன்னார். திருமணத்துக்குப்பிறகு அதை ஏற்றுக்கொள்வதாக நான் சொன்னேன்.

தற்கொலை செய்வதற்கு முன்பு இரவு 8 மணி அளவில் வினோத் அவரது தாயாருடன் காரசாரமாக செல்போனில் பேசி சண்டை போட்டார். பின்னர் போனை வைத்துவிட்டு, எனது வீட்டில் வேறு பெண் பார்க்கிறார்கள் என்று கோபமாக சொன்னார். அவரது கோபத்தை தணிக்க நான் அவரை படுக்கை அறைக்கு அழைத்துச்சென்றேன். உங்கள் விருப்பப்படி நடக்கிறேன். தயவு செய்து கோபத்தை விடுங்கள் என்றேன்.

என்னை வித விதமான ஆடை அணிந்து அழகு காட்டும்படி ஆசையாக கேட்டார். நானும் அதன்படி நடந்தேன். கடைசியாக சேலை கட்டி வரும்படி கூறினார். நானும் சேலை கட்டி வந்தேன். எனது அழகை ரசித்தார். இருவரும் சந்தோஷமாகத்தான் இருந்தோம்.

பின்னர் சிகரெட் குடிக்க பாத்ரூம் சென்றார். நான் சேலையை கழற்றிவிட்டு, துண்டை கட்டிக்கொண்டு, வேறு உடை அணிய முயற்சித்தேன். பாத்ரூம் சென்ற அவரை நீண்ட நேரம் காணாததால், துண்டோடு படுக்கை அறையைவிட்டு வெளியில் வந்தேன். அப்போது எதிரில் உள்ள இன்னொரு படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது தான், வினோத்குமார் அங்கு தூக்கில் தொங்கியதை பார்த்து, மார்பில் கட்டியிருந்த துண்டோடு வெளியே ஓடி வந்து உதவி கேட்டேன்.

காவலாளி உள்ளிட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் முன்னிலையில்தான், அவரது உடலை தூக்கில் இருந்து இறக்கினோம். அவர் இதுபோல் ஒரு முடிவை எடுப்பார் என்று கனவில் கூட நினைக்கவில்லை. எனது காதல் நிஜமானது என்று அல்போன்சா கூறியுள்ளாராம்.

மார்பில் கட்டிய துண்டோடு ஓடி வந்தார்

அல்போன்சா வசிக்கும் வீடு சியாமளா கார்டன் அடுக்கு மாடிக் குடியிருப்பில் 3வது மாடியில் உள்ளது. இது பெரும் பணக்காரர்கள், சினிமாக்காரர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு வளாகமாகும். பல நடிகர், நடிகையர் இங்கு வசிக்கிறார்களாம்.

இந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் கண்காணிப்புக் கேமரா உள்ளது. அல்போன்சா வீட்டின் தளத்திலும் கூட கேமரா உள்ளது. அதில் வினோத்குமார் மரணத்திற்கு முன்பும், பின்பும் யாரும் வீட்டுக்குள் வந்ததாக பதிவு இல்லை. அதேசமயம், அல்போன்சா கட்டிய துண்டுடன் வீட்டை விட்டு வெளியே ஓடி வரும் படம் உள்ளதாக போலீஸார் கூறுகிறார்கள்.

ஆனால் வினோத்குமார் மரணத்திற்கு முன்பு ஏதோ விபரீதமாக நடந்துள்ளதாகவும், அதனால்தான் வினோத்குமார் மரணம் நேர்ந்துள்ளதாகவும், யார் தவறு செய்திருந்தாலும் கடும் தண்டனை நிச்சயம் என்றும் போலீஸார் கூறியுள்ளனர். மேலும் மரணத்திற்கு முன்பு, அல்போன்சாவின் துபாய் கணவரின் புகைப்படங்களை வினோத் குமார் கிழித்தெறிந்துள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

கணவர் பேச்சை மீறி வினோத்குமாருடன் பழகிய அல்போன்சா

வினோத்குமாருடன் அல்போன்சா ஆரம்பத்தில் நட்பாக பழக ஆரம்பித்தபோது அதை அல்போன்சாவின் கணவர் விரும்பவில்லை என்று தெரிகிறது. வினோத்குமாருடன் பழக வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அதை அல்போன்சா கேட்கவில்லையாம். தொடர்ந்து பழகியுள்ளார்.

இந்த நட்பு நாளுக்கு நாள் தீவிரமடையவே வெறுத்துப் போன அல்போன்சாவின் கணவர் தனது மகள் ஆலியாவை விட்டு விட்டு துபாய் போய் விட்டாராம். அதன் பின்னர்தான் விருகம்பாக்கத்தில் வசதியான வீட்டை எடுத்து வினோத்குமாருடன் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார் அல்போன்சா.

அல்போன்சா, வினோத்குமாரின் இந்த வாழ்க்கைக்கு அல்போன்சாவின் தந்தை அந்தோணியும், தாயார் ஓமனாவும், தம்பி ராபர்ட்டும் ஆதரவு கொடுத்துள்ளனர். மேலும் கல்யாணம் செய்து கொள்ளவும் ஆதரவு தெரிவித்தனராம். இதையடுத்தே விவாகரத்து செய்ய அல்போன்சா முடிவெடுத்துள்ளார்.

பணம் பறிக்க அல்போன்சாவுடன் எனது மகனை பழக விட்டார் ராபர்ட்- வினோத்குமாரின் தந்தை!!!

சென்னை: எனது மகன் தீராத சினிமா ஆசையில் இருந்தான். அவனிடமிருந்து பணம் பறிப்பதற்காக தனது அக்காள் அல்போன்சாவுடன், வேண்டும் என்றே பழக விட்டார் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட். அக்காளும், தம்பியுமாக சேர்ந்து பல லட்சம் பணத்தைப் பறித்துள்ளனர். இப்போது உயிரையும் பறித்து விட்டனர் என்று வினோத்குமாரின் தந்தை பாண்டியன் கூறியுள்ளார்.

அல்போன்சா வீட்டில் மர்மமான முறையில் இறந்த அவரது காதலர் வினோத்குமார் சென்னை அருகே உள்ள கல்பாக்கத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் பாண்டியன். தாயார் பெயர் ராஜேஸ்வரி. ஒரே ஒரு தம்பி, பெயர் மோகன். பாண்டியன், ரியல் எஸ்டேட் அதிபராகவும், திருக்கழுக்குன்றம் நகர அதிமுக எம்.ஜிஆர். மன்ற இணைச் செயலாளராக இருக்கிறார்.

தனது மகனின் உடலைப் பார்த்து கதறி அழுத பாண்டியன் தனது மகன் குறித்துக் கூறுகையில், சினிமாவில் பெரிய நடிகராக வரவேண்டும் என்று எனது மகன் வினோத் குமார் மிகவும் வெறியோடு இருந்தான். அதற்காக கடுமையாக உழைத்து வந்தான். இதற்காக லட்சக்கணக்கில் நான் அவனுக்கு பணம் கொடுத்தேன்.

ராபர்ட் அறிமுகம் மகனுக்கு எப்போது கிடைத்ததோ அப்போது இருந்து எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டான். என் மகன் நன்றாக நடனம் ஆடுவான் என்பதால் ராபர்ட் இயக்கிய ஒரு ஆல்பத்தில் மகன் நடித்தான். இதையடுத்து வினோத்குமார் சினிமாவில் நடிப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வான் என்பதை அறிந்து கொண்டு ராபர்ட் அல்போன்சாவை அவனுடன் பழக வைத்துள்ளார்.

பின்னர் 2 பேரும் சேர்ந்து என் மகனிடம் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியுள்ளனர். இந்நிலையில் நல்ல கதை ஒன்று உள்ளது அதனை தயாரித்து நீயே நடி என்று ராபர்ட் கூறியுள்ளார். ஆனால் அதற்கு என் மகன் சம்மதிக்கவில்லை. எப்படியோ மிரட்டி அவனை அந்த படத்திற்கு பூஜை போட வைத்துள்ளார். படத்தின் பெயர் சங்கு. இதில் அல்போன்சாவும் நடிக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அல்போன்சா எனது மகன் மோகனுக்கு போன் செய்து, உனது அண்ணன் வினோத் தற்கொலை செய்து விட்டார் என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. பதற்றத்துடன் அல்போன்சா வீட்டிற்கு காரில் வந்தேன். அப்போது அல்போன்சா மகனின் உடலை வீட்டில் விரிக்கும் பெரிய மிதியடி ஒன்றால் மூடி வைத்திருந்தார். நான் திறந்து பார்த்த போது மூக்கு, காது, வாய் போன்றவற்றில் ரத்த காயம் இருந்தது. என் மகனை கொன்று விட்டாயே என்று அவருடன் வாக்குவாதம் செய்தேன்.

அல்போன்சாவுடன் சேர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் எனது மகன் கேட்கவில்லை. அவனது சினிமா ஆசை நிராசையாகி விட்டது என்று கூறினார்.

Comments