இசை அமைப்பாளர்கள் இடையே போட்டியால் ஒதுங்கிவிட்டேன் பாடகர் மனோ!!!

Thursday, March 22, 2012
இசை அமைப்பாளர்களுக்கிடையே போட்டி அதிகமாகிவிட்டதால் இசை அமைப்பாளர் ஆகாமல் ஒதுங்கிவிட்டேன் என்றார் பாடகர் மனோ.
இது பற்றி அவர் கூறியதாவது:

எனக்கு பாடகராக வாய்ப்பு தந்தது எம்.எஸ்.விஸ்வநாதனும், இளையராஜாவும்தான். இசை அமைப்பதற்கு இன்று போட்டி அதிகரித்துவிட்டது. சொந்த செலவில் வந்து ஒரு பாடலுக்கு இசை அமைத்து கொடுத்துவிட்டு போங்கள் என சொல்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். அதனால்தான் தெலுங்கு இசை அமைப்பாளர் சக்ரவர்த்தியிடம் இசை உதவியாளராக பணியாற்றியும் நான் இசை அமைக்காமல் ஒதுங்கிவிட்டேன்.

என் மகன் ஷகிர். பாடும் திறமை இருந்தாலும் நடிப்பில் ஆர்வம் அதிகம். ‘நாங்கÕ படத்தில் வில்லன் வேடத்தில் இயக்குனர் செல்வா அறிமுகப்படுத்தினார். ஹீரோ ஆக வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. வில்லன், குணசித்ர வேடம் என எந்த வாய்ப்பு வந்தாலும் நடிப்பதாக முடிவு செய்திருக்கிறார். பழைய நடிகர்கள்போல் அவரே பாடி அவரே நடிக்கவும் பயிற்சி பெற்றிருக்கிறார். எதிர்காலத்தில் அவரை வைத்து படம் தயாரிப்பேன்.

Comments