நடிகை அனுராதாவுக்கு கொலை மிரட்டல் - கமிஷனரிடம் புகார்!!!

Friday, March 16, 2012
கொடுக்க வேண்டிய பணத்தைக் கேட்டதால் கொன்றுவிடுவதாக மிரட்டல் வருகிறது என சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகை அனுராதா புகார் தெரிவித்துள்ளார்.

சிவாஜி, கமல்ஹாசன், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் முன்னாள் கவர்ச்சி நடிகை அனுராதா. தற்போது டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார்.

நேற்று காலை அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த அவர் ஒரு புகார் மனு தந்தார். அதில், தனது மகன் மோட்டார் சைக்கிளை ரூ.75 ஆயிரத்துக்கு விலை பேசி விற்றுவிட்டதாகவும், அதில் ரூ.37 ஆயிரம் தந்துவிட்டதாகவும், மீதி பணத்தை தராமல் மோட்டார் சைக்கிளை வாங்கியவர் கொலை மிரட்டல் விடுவதாகவும், தனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அனுராதாவை மிரட்டும் நபர் சென்னை கொத்தவால் சாவடி பகுதியில் வசிப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் அனுராதா கொடுத்த மனு மீது, உரிய நடவடிக்கை எடுக்கும்படி துறைமுகம் உதவி போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments