புதுமுக நடிகர்களுக்கு ரஜினி சொன்ன அட்வைஸ்

Tuesday, March 13, 2012
செல்வா இயக்கிய படம் ‘நாங்கÕ. இதில் 5 ஜோடிகளில் ஒரு ஜோடியாக நடித்திருக்கின்றனர் வினோத், விஷ்ணுபிரியா. இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசு வெளியானது. இதுபற்றி வினோத் கூறியதாவது: நடன பள்ளி யில் ஆசிரிய ராக இருந்தேன். நாங்க படத்தில் இயக்குனர் செல்வா வாய்ப்பு கொடுத்தார். 5 ஜோடிகளின் காதல் கதையான இதில், எனது காதலியாக விஷ்ணுபிரியா நடித்திருந்தார். படத்தில்தான் காதலர்களாக நடித்தோம். ஷூட்டிங்கில் வசனம் தவிர வேறு எதுவும் அவரிடம் பேசியதுகூட கிடையாது. ஆனால் எங்களுக்குள் காதலா என்கிறார்கள். இதில் நடித்த அனைவரும் இயக்குனர் செல்வாவுடன் சென்று ரஜினிசாரை நேரில் சந்தித்தோம். அப்போது அவர், ‘என்னை தேடி வாழ்த்து பெற நீங்கள் வந்ததுபோல், எதிர்காலத்தில் உங்களை தேடி மற்றவர்கள் வரும் அளவுக்கு உழைத்து முன்னேற வேண்டும்Õ என்றார். அவர் சொன்ன வார்த்தை புதுமுகங்களாக நடிக்க வரும் அனைவருக்கும் பொருந்துவதாக இருந்தது. அந்த வாழ்த்து மனதில் பதிந்திருக்கிறது என்றார்.

Comments