
சோன்னு மழையடிச்ச பின்பு பொறிகலங்கி நிக்கிற உப்பு வியாபாரி போலாகிவிட்டார் அமலா பால். அவர் மேல் அடித்த தமிழ்ப்பட மழையும் மாயையும் கிட்டத்தட்ட ஓய்ந்துவிட்டது. இந்த பெருமழையில் தனது மேக்கப் கலைந்து ஐயோவாகிப் போன அமலா பால், அதன்பின் ஆக வேண்டிய வேலையை பார்க்க ஆந்திரா பக்கம் போயிருக்கிறார். இப்போது அவர் மேல் அடிக்கவிருப்பது தெலுங்கு மழை. இந்த அருமையான வாய்ப்பை அவருக்கு வழங்கியது 'காதலில் சொதப்புவது எப்படி'தானாம். கடைசியில் சொதப்புவது எப்படி என்பதை தியேட்டரில் லைட் போடும்போதுதான் காண்பித்தான் நம்ம ஊரு ரசிகன். ஆனால் ஆந்திராவில் இந்த படம் நல்ல ஹிட். சமீபத்தில் ஆந்திராவுக்கு போயிருந்த அமலா பாலை பார்வதி.. பார்வதி.. என்று துரத்த ஆரம்பித்துவிட்டார்களாம் ரசிகர்கள். இந்த படத்தின் ஹிட் எனக்கு தெலுங்குலேயும் பெரிய இடத்தை பிடிச்சு தரும்னு நம்புறேன் என்கிறார் அமலா பால். அதற்கேற்றார் போல ராம்சரண் தேஜாவுடன் ஒரு படத்தில் நடிக்கிறாராம். அங்கேயும் பிரஸ் இருக்கும். அவங்களையும் பகைச்சுக்கிட்டா அப்புறம் பென்ஷன் வயசு ஹீரோக்களை தேடி கன்னடத்துக்குதான் போகணும் ஆமா!
Comments
Post a Comment