விருந்தில் புறக்கணிப்பு: ஆர்யாவுடன் மோதலா? அமலாபால் விளக்கம்!!!

Wednesday,March,28,2012
ஆர்யா, அமலாபால் நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்தி பரவியுள்ளது. ஆர்யா புது வீட்டில் குடியேறியதற்காக நெருங்கிய நண்பர்களை அழைத்து விருந்து கொடுத்தார். இதில் நயன்தாரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆனால் அமலாபாலை அழைக்காமல் ஒதுக்கி விட்டதாகவும் கூறப்பட்டது.

ஆர்யாவும் அமலாபாலும் வேட்டை படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவரும் நெருக்கமான நண்பர்களானார்கள். ஒருவரையொருவர் புகழ்ந்தும் பேசி வந்தனர். மீண்டும் இருவரும் ஜோடியாக நடிக்கப் போவதாகவும் கிசு கிசுக்கள் பரவின.

இந்த நிலையில்தான் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது. தனது புதுப்படங்களுக்கு அமலாபாலுக்கு பதில் நயன்தாராவை ஜோடியாக்கும்படி நிர்ப்பந்திக்கிறாராம்.

இதுபற்றி அமலாபாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

எனக்கும் ஆர்யாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக வெளியான செய்தி எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. யாரோ இந்த தவறான செய்தியை பரப்பி உள்ளனர். ஆர்யாவுக்கும் எனக்கும் நட்பு தொடர்கிறது. அவரோடு நான் தொடர்பில்தான் இருக்கிறேன். ஆர்யா வீட்டில் விருந்து நடந்தபோது நான் துபாயில் இருந்தேன். அதனால்தான் அதில் பங்கேற்க முடியவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments