வனிதா மீண்டும் நடிக்க வருகிறார்: கஷ்டங்கள் தைரியத்தை கொடுத்துள்ளது: மீண்டும் சினிமா பிரவேசம் -வனிதா!!!

Friday, March 16, 2012
வனிதா மீண்டும் நடிக்க வருகிறார். ஏற்கனவே சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார். முதல் கணவரை விவாகரத்து செய்து இரண்டாம் திருமணம் செய்தார்.

முதல் கணவருடன் வாழ்ந்த குழந்தையை மீட்க போலீஸ், கோர்ட் என போனார். குழந்தை தன்னுடன் வர மறுத்ததால் இரண்டாம் கணவரை பிரிந்தார். தற்போது குழந்தைக்காக மீண்டும் முதல் கணவருடனேயே சேர்ந்துள்ளார். தற்போது உடல் எடை குறைத்து ஒல்லியாக தெரிகிறார். சினிமாவில் நடிக்க கதைகள் கேட்டு வருகிறார்.

மீண்டும் நடிப்பது குறித்து வனிதா கூறியதாவது:-

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டதாலும் சொந்த பிரச்சினைகளாலும் 11 வருடங்களாக சினிமா பற்றி சிந்திக்கவில்லை. இப்போது மீண்டும் சவாலான வேடங்களில் நடிக்க முடிவெடுத்து சினிமாவுக்கு வருகிறேன். கதைகள் கேட்கிறேன். விரைவில் புதுப்படத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவேன்.

ஆறு மாதங்களாக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடல் எடையை குறைத்து உள்ளேன். அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைக்கவில்லை. நான் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் மூலம் மனதளவில் தைரியத்தை பெற்றுள்ளேன். இப்போது என் குழந்தைகளே எனது வாழ்க்கை என்று ஆகிவிட்டது.

Comments