சோனம் கபூர் - சிம்பு விரும்பினார், தனுஷ் ஜோடியானார்!!!

Sunday, March 25, 2012
சோனம் கபூர். அனில் கபூ‌ரின் மகள். இவருடன் ஜோடி சேர தமிழ் நடிகர்களுக்கு உள்ளூர கொள்ளை ஆசை. அதனை வெளிப்படையாக‌த் தெ‌ரிவித்தவர் சிம்பு மட்டுமே. தனது ஒஸ்தியில் இவரைதான் ஜோடியாக்க சிம்பு விரும்பினார். ஆனால் ‌ரிச்சாவுடன் அவர் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று.

சிம்புவின் விருப்ப நடிகை தற்போது தனுஷ் ஜோடியாகியிருக்கிறார். இங்கல்ல, இந்தியில்.

தனுஷை பாலிவுட் பக்கம் அடிக்கடி பார்க்க நேர்ந்ததற்கு காரணம் அவர் அபிஷேக்பச்சனை இயக்குகிறார் அதனால்தான் அடிக்கடி மும்பை வருகிறார் என்று பயமுறுத்தினர் சிலர். ஆனால் இந்தியில் நடிக்கிறார் தனுஷ். Raanjhanaa என்று பெய‌ரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் நடிப்பதை முன்னிட்டே மும்பைக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார் தனுஷ். இந்தப் படத்தில் சோனம் கபூரை அவருக்கு ஜோடியாக்கியுள்ளனர்.

சோனம் கபூ‌ரின் மீது நடிகர்களுக்கு ஏன் இத்தனை க்ரேஸ் என்று ஆச்ச‌ரியப்படுகிறவர்கள் டெல்லி 6 படத்தில் வரும் மசாக்கலி பாடலை யூ டியூபில் பார்க்கவும்.

Comments