Thursday, March 15, 2012
'காவலன்' படத்துக்கு பின் அசினுக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை. இந்தியில் 'ஹவுஸ்புல் 2போல்பச்சன்' என இரு படங்களில் நடித்து வருகிறார். 'ஹவுஸ்புல் 2' படம் ஏப்ரல் 5-ல் ரிலீசாக உள்ளது. சினிமாவில் ரொம்ப கஷ்டங்களை சந்தித்ததாக அசின் கூறினார். இது குறித்து ஐதராபாத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:- சினிமாவில் எனக்கு யாருடைய தயவு தாட்சண்யமும் தேவையில்லை. ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் இந்த நிலைமைக்கு வந்தேன். நடிகையாக அறிமுகமானபோது யாரும் எனக்கு உதவவில்லை. தனியாக போராடி எனது சொந்த திறமையால் முன்னுக்கு வந்தேன். இனிமேலும் அப்படித்தான் இருப்பேன். சினிமா உலகில் ஆரம்ப காலத்தில் கஷ்ட நஷ்டங்களை பார்த்து விட்டேன். அப்போதும் தனியாகத்தான் இருந்தேன். இப்போதும் தனியாகவே இருக்கிறேன். சினிமாவில் சில நண்பர்கள் கிடைத்து இருக்கிறார்கள். திரையுலகில் என் குடும்பத்தினர் யாரும் இல்லை. சொந்தக்காரர்களும் கிடையாது. சோதனைகளை தாண்டி வந்து இருக்கிறேன். சினிமாவில் நிலைக்க திறமை போதும்; என் திறமை மேல் நம்பிக்கை இருக்கிறது. அதிர்ஷ்டம் இருந்தால் உயரலாம் என்கிறார்கள். அதிர்ஷ்டத்தை நம்பி வீட்டில் சும்மா இருந்தால் எல்லாம் வந்து விடுமா? திறமைதான் முக்கியம். நான் திறமையை நம்புகிறேன். சரி.. சரி.. திறமைசாலிதான் ஒத்துக்கிறோம்.....

Comments
Post a Comment