சிரஞ்சீவி மகன் ஜோடியாக நடிக்க தீபிகா தயக்கம்!

Monday, March 05, 2012
மும்பை::சிரஞ்சீவி மகனுக்கு ஜோடியாக நடிக்க தீபிகா படுகோன் தயக்கம் காட்டி உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் படத்தில் நடிக்கிறார் பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன். இந்நிலையில் அமிதாப்பச்சன், ஜெயா பச்சன் ஜோடியாக நடித்த சன்ஜீர் படத்தை இந்தி, தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் அமிதாப்பச்சன் ஏற்று நடித்த ஆவேசமான போலீஸ்காரர் வேடத்தை ராம் சரண் தேஜா ஏற்று நடிக்க உள்ளார். அமிதாப் ஜோடியாக ஜெயா பச்சன் நடித்தார். அந்த வேடத்தில் தீபிகா படுகோனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

ஆனால் ராம் சரணுடன் தீபிகா நடிக்க தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி தீபிகா தரப்பில் கூறும்போது, ‘நிறைய தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. ஆனால் தமிழில் கோச்சடையான் படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்க மட்டுமே ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும் இந்த மாதம் முதல் ஜவானி திவானி மற்றும் மணாலி ஆகிய படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார் என்றனர். ராம் சரண் இந்திக்கு புதியவர். புதுமுகத்துடன் நடிப்பதா என தீபிகா தயக்கம் காட்டுவதாலேயே அப்படத்தில் நடிப்பது பற்றி பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Comments