ஷாமின் 'ஏசு ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர்'!!!

Saturday, March 24, 2012
ஏ.கே என்டர்டெயிண்மென்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பிரபல தெலுங்கு சினிமா நிறுவனம் முதன் முறையாக தமிழில் தயாரிக்கும் படம் 'ஏசு ராஜா ராணி ஜாக்கி மற்றும் ஜோக்கர்'. இப்படத்தில் ஷாம், அல்லரி நரேஷ் ஆகியோர் நடிக்க, இவர்களுடன் வைபவ், ராஜு சுந்தரம், சினேகா உல்லல், நீலம் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். அனில் சுங்கரா தயாரிப்பாளராக மட்டுமின்றி இயக்குநராகவும் இப்படத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார். இவர் நியூயார்க் பிலிம் இன்ஸ்டியூட்டில் திரைப்பட இயக்கம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இளமைத் துள்ளலுடன் நகைச்சுவைக் காட்சிகள் நிறைந்த பொழுது போக்குப்படமாக உருவாகும் இப்படம் இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான முப்பரிமாண (3D) திரைப்படமாகவும் உருவாகிறது. அமெரிக்காவில் இருந்து ஸ்டீரியோஸ்கோபிக் உபகரணங்களும் அதனை இயக்கும் தொழில் நுட்பக்கலைஞர்களான ஸ்டீரியோகிபாரர்ஸூம் வரவிருக்கிறார்கள். பிரபல தெலுங்கு ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் பப்பிலஹரி மகன் பப்பாலஹரி இசையமைக்கிறார். இப்படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ரோசய்யா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பாங்காக்கில் நடைபெற இருக்கிறது. ஆடப்போவது ரம்மியா? மங்காத்தாவா?

Comments