
தமன்னா நடிக்க இருந்த படத்தில் திடீரென காஜல் அகர்வால் ஹீரோயின¢ ஆனார். தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ்பாபு. சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஹீரோயினாக நடிக்க தமன்னாவிடம் பேசப்பட்டது. அவர் கால்ஷீட் ஒதுக்கி தர இருந்தார். தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பதால் கால்ஷீட் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு படம் தொடங்கப்பட்டது. ஆனாலும் ஹீரோயின் முடிவாகாமல் இருந்ததால் ஷூட்டிங் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து தமன்னாவுக்கு பதிலாக வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பல்வேறு புதுமுகங்களை அழைத்து தேர்வும் நடந்தது. ஆனால் பொருத்தமான ஹீரோயின் கிடைக்கவில்லை. இந்நிலையில் காஜல் அகர்வாலிடம் இருந்து தூது வரவே இயக்குனர் அவரிடம் பேசினார். ஏற்கனவே ‘பிசினஸ்மேன்Õ என்ற படத்தில் மகேஷ் பாபுவுடன் காஜல் நடித்திருந்ததால் இதிலும் அவர் ஜோடி சேர மகேஷ் பாபு சம்மதித்தார். உடனடியாக கால்ஷீட் வழங்கினார் காஜல். இதையடுத்து ஷூட்டிங் தொடங்கியுள்ளது. தமன்னா வாய்ப்பை காஜல் பறித்திருப்பதால் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment