துப்பாக்கியில் ஜெய் நடிக்கவில்லை - ஏ ஆர் முருகதாஸ் மறுப்பு!!!

Tuesday, March 06, 2012
துப்பாக்கி படத்தில் ஜெய் நடிப்பதாக வந்த செய்திகளை மறுத்துள்ளார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

அசப்பில் விஜய்யின் சாயல் நடிகர் ஜெய்யிடம் உண்டு. ஒரு வேளை அவர் தம்பியாக இருக்குமோ என்றுதான் பகவதி படம் பார்த்தபோது நினைத்தனர். அந்தப் படத்தில் விஜய்யின் தம்பியாகத்தான் அவர் நடித்திருந்தார்.

இப்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து துப்பாக்கி படத்தில் அவர் நடிப்பதாக கடந்த இரு தினங்களாக செய்திகள் வெளியாகின.

இந்தப் படத்தில் தான் நடிப்பது உண்மைதான் ஜெய்யும் கூறிவந்த நிலையில், இந்த செய்திகள் தவறானவை என மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்.

அவரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "இந்தப் படத்தில் விஜய்க்கு தம்பி வேடமே இல்லை. அப்புறம் எங்கே ஜெய் நடிப்பது. இது தவறான செய்தி, என்று மறுத்தார் முருகதாஸ்.

Comments