'கோச்சடையான்' படப்பிடிப்பு - லண்டன் புறப்பட்டார் ரஜினி!!!

Saturday, March 17, 2012
கோச்சடையான்' படப்பிடிப்புக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அதிகாலை லண்டன் பயணமானார். அடுத்த மாதம் (ஏப்ரல்) 7-ந் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.

எந்திரன்' படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த், 'ராணா' என்ற படத்தில் நடிப்பதாக இருந்தார். இப்போது அந்த படம் தள்ளிப்போடப்பட்டு, அதற்கு பதில், `கோச்சடையான்' என்ற புதிய படத்தில் நடிக்கிறார்.

கோச்சடையான்' படத்தில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா இயக்குகிறார். டைரக்ஷன் மேற்பார்வையை கே.எஸ்.ரவிகுமார் கவனிக்கிறார்.

லண்டன் புறப்பட்டார்

இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்குகிறது. இதற்காக ரஜினிகாந்த் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு விமானம் மூலம் லண்டன் புறப்பட்டு செல்கிறார்.

அவருடன் மகள் சௌந்தர்யா, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் 20 பேர் கொண்ட குழுவும் செல்கிறது.

கோச்சடையான்' படத்தில் ரஜினிகாந்துடன் சரத்குமார், நாசர், ஜாக்கி ஷராப், ரமேஷ்கண்ணா ஆகியோரும் நடிக்கிறார்கள். இவர்களும் லண்டன் செல்கிறார்கள்.

லண்டனில் உள்ள அதிநவீன ஸ்டுடியோவில் சில தினங்களும், பின்னர் இங்கிலாந்தின் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களிலும் படப்பிடிப்பு நடக்கிறது. மார்ச் 21-ம் தேதி தொடங்கும் 'கோச்சடையான்' படப்பிடிப்பு ஏப்ரல் 6-ந் தேதி வரை நடகிறது.

படப்பிடிப்பை முடித்துக்கொண்டு ஏப்ரல் 7-ந் தேதி ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.

Comments