Saturday, March 17, 2012நடிகை ஜெனிலியா விளம்பர தூதராக இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம், தனக்கு வீடு கட்டி தரக்கோரி ரூ.54 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அந்த நிறுவனம் வாக்குறுதி அளித்தபடி வீடு கட்டித்தரவில்லை என்றும் கூறி திருப்பாதையா என்பவர் ஐதராபாத்தில் உள்ள பெருநகர தலைமை முதல் வகுப்பு நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி, இது தொடர்பாக நடிகை ஜெனிலியா மற்றும் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் 5 பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரிக்குமாறும், வருகிற 27-ந் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறும் நேற்று சைபாபாத் போலீசுக்கு உத்தரவிட்டு இருப்பதாக திருபாதையாவின் வக்கீல் பாலாஜி வதேரா தெரிவித்தார்.
Comments
Post a Comment