Thursday, March 15, 2012
சென்னையை சேர்ந்தவர் பத்மாலட்சுமி(41) அமெரிக்காவில் வசித்து வரும் இவர் ஏராளமான விளம்பர படங்களில் மாடலிங் செய்துள்ளார். சில ஆங்கில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை சில ஆண்டுகள் காதலித்தார். இதன் மூலம் அவர் உலகம் முழுவதிலும் பிரபலமானார். சல்மான் ருஷ்டியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவரை பிரிந்தார். 3 ஆண்டுகளுக்கு முன்பு டெல் கம்ப்யூட்டர்ஸ் அதிபர் மைக்கேலின் சகோதரர் ஆடம்டெல் என்பவரை காதலித்தார்.
அதே காலக்கட்டத்தில் பத்மாலட்சுமி அமெரிக்க தொழில் அதிபர் டெட்டி பால்ஸ்மேன் (71) என்பவரையும் காதலித்தார். இருவருக்கும் 30 வயது வித்தியாசம் உள்ளது. இதனால் அமெரிக்க பத்திரிகைகள் நடிகை பத்மாலட்சுமி சொத்துக்கு ஆசைப்பட்டு பால்ஸ்மேனை காதலிப்பதாக கூறின. இவற்றை பத்மா லட்சுமி மறுத்து வந்தார்.
தற்போது பத்மாவுக்கு 2 வயதில் கிருஷ்ணா என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பால்ஸ்மேன் புற்று நோயால் திடீரென இறந்து போனார். அவர் இறப்பதற்கு முன்பு தான் சம்பாதித்த ரூ.8883 கோடி சொத்துக்களை கிருஷ்ணா பெயரில் எழுதி வைத்தார். இதையறிந்ததும் பத்மாலட்சுமியின் முன்னாள் காதலர் ஆடம்டெல் அங்குள்ள கோர்ட்டில் கிருஷ்ணா எனது மகள், அவளை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த பத்மாலட்சுமி கிருஷ்ணா பால்ஸ்மேனின் உண்மையான மகள். ஆடம்டெல் சொத்துக்கு ஆசைப்பட்டு என் மகள் கிருஷ்ணாவை சொந்தம் கொண்டாடுகிறார் என்றார். வழக்கை விசாரித்த கோர்ட்டு ஆடம்டெல் உண்மையான தந்தையா? என்பதை கண்டறிய மரபணு சோதனைக்கு உத்தரவிட்டுள்ளது

Comments
Post a Comment