சினிமா எழுத்தாளர்கள் மீது பிருத்விராஜ் தாக்கு!!!

Tuesday, March 13, 2012
திருவனந்தபுரம் சினிமா எழுத்தாளர்களுக்கு இந்த காலத்து இளைஞர்களுக்கான கதை எழுத தெரியவில்லை என்றார் பிருத்விராஜ். மலையாள படங்கள் சமீபத்திய தேசிய விருதில் பின் தங்கியது. இதையடுத்து பிருத்விராஜ் அளித்த பேட்டியில் கூறியதாவது: சமகாலத்து கதைகள் எழுதுவதில் பஞ்சம் இருக்கிறது. பல்வேறு மலையாள எழுத்தாளர்கள் இந்த தலைமுறையினர் கிடையாது. இதனால் கதைகளிலும் புதுமை இல்லை. அந்த காலத்து கதைகள் போலவே இருக்கிறது. சமீபத்திய ஹிட் படங்களான ‘பியூட்டிபுல்’, ‘டிராபிக்’ ஆகிய படங்கள் 40 வயதுக்கு குறைவானவர்கள் எழுதியது. அது வெற்றிக்கு உதவியது. தங்களை சுற்றி இன்றைய காலகட்டத்தில் என்ன நிகழ்கிறதோ அதை அடிப்படையாக கொண்டு கதை அமைக்கிறார்கள்.

அதுதான் வெற்றிக்கு காரணம். பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்துவிட்டதால் நான் சூப்பர் ஸ்டார் ஆகிவிட முடியாது. நான் ஒரு சாதாரண நடிகன். பட்டம் வைத்திருக்கும் நடிகர்களிடம்தான் பட்டத்தினால் என்ன முக்கியத்துவம் கிடைக்கிறது என்பதை கேட்க வேண்டும். இவ்வாறு பிருத்விராஜ் கூறினார். ராவணன் படத்துக்கு பிறகு தமிழில் பிருத்விராஜ் வேறு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

Comments