
கமல்ஹாசன் நடிக்கும் விஸ்வரூபம் படத்துக்காக ஹெலிகாப்டர் ஆக்ஷன் காட்சியை ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் அமைத்தார்.
பேர்ல் ஹார்பர் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களுக்கு சண்டை காட்சிகள் அமைத்தவர் லீ விட்டேக்கர். இவருக்கு பலமுறை கோலிவுட் படங்களில் ஸ்டன்ட் அமைக்க அழைப்பு வந்தபோது மறுத்துவிட்டார். கமல்ஹாசன் நடித்து இயக்கும் விஸ்வரூபம் படத்துக்கு ஸ்டன்ட் அமைக்க அழைப்பு விடுத்தபோது ஒப்புக்கொண்டார்.
இப்படத்தில் தீவிரவாதியாக நடிக்கும் ராகுல் போஸுடன் ஹெலிகாப்டரில் பறந்தபடி கமல்ஹாசன் சண்டைபோடும் காட்சி அமைக்கப்பட்டது. இதற்காக நேரில் வந்து பயிற்சி அளித்து சண்டை காட்சியை மேற்பார்வையிட்டு படமாக்கினார் லீ.குறைந்த அளவே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும் துணிச்சலுடன் ஹெலிகாப்டரில் ரோப் கட்டி பறந்தபடி கமல்ஹாசன் நடித்த ஸ்டன்ட் காட்சியை கண்டு வியந்த லீ அவருக்கு கை குலுக்கி பாராட்டு தெரிவித்தார்.
Comments
Post a Comment