தெலுங்கு படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடிக்கிறேனா? த்ரிஷா பேட்டி:-ஜீவாவுடன் ஜோடி சேரும் திரிஷா!!!

Tuesday, March 06, 2012
தெலுங்கு படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடிப்பதாக கூறப்படுவது பற்றி த்ரிஷா பதில் அளித்தார். அவர் கூறியது: தமிழில் கடைசியாக Ôமன்மதன் அம்புÕ படத்தில் நடித்தேன். கடந்த 7 மாதமாக தமிழில் நடிக்காமல் இருந்தேன். எனது படங்களும் தமிழில் வெளியாகவில்லை. இதற்கு என்ன காரணம் என கேட்கிறார்கள். நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தேன். அதைத் தவிர வேறு காரணம் இல்லை. காத்திருந்ததற்கு பலனாக விஷாலுடன் Ôசமரன்Õ, ஜீவாவுடன் Ôஎன்றென்றும் புன்னகைÕ படங்களில் நடிக்கிறேன். Ôசமரன்Õ, த்ரில்லர் படம். அதில் ரொமான்டிக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. Ôஎன்றென்றும் புன்னகைÕ படம், காதல் கதையை கொண்டது. படம் முழுக்கவே காதல் காட்சிகள் இருக்கும். அதனால் எனக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. நான் ரொமான்டிக்கான பெண்ணா என சிலர் கேட்கிறார்கள். Ôவிண்ணைத்தாண்டி வருவாயாÕ படத்தில் நடித்ததில் இருந்து இப்படி கேட்கிறார்கள். அந்த படம் எனக்கு தந்த பெயரை மறக்க முடியாது. அதே நேரம், நான் ரொமான்டிக்கானவள் கிடையாது. தெலுங்கு படத்தில் இளமையாக தெரிய வேண்டும் என்பதற்காக படு கவர்ச்சியாக நடிப்பதாக புரளி கிளப்புகிறார்கள். அதற்கெல்லாம் எனக்கு அவசியமே கிடையாது. Ôதம்முÕ தெலுங்கு படத்தில் இரண்டு விதமான கெட்டப்பில் நடிக்கிறேன். அது கதைக்கு தேவைப்படுகிறது. மற்றபடி எல்லை மீறி கவர்ச்சியாக நடித்ததில்லை. நடிக்கவும் மாட்டேன்.
என்னுடன் நடித்த ஹீரோக்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் கமல்ஹாசன்தான். ஷூட்டிங்கில் அனைவரையுமே கவனிப்பார். சிறு தவறு செய்தாலும் கண்டுபிடித்து திருத்துவார். நான் ஏற்க விரும்பும் கேரக்டர்களில் Ôஅருந்ததிÕ போன்ற பட கேரக்டருக்கு முக்கியத்துவம் தருகிறேன். இவ்வாறு த்ரிஷா கூறினார்.

ஜீவாவுடன் ஜோடி சேரும் திரிஷா!!!

ஜீவா நடிக்கும் புதுப்படமொன்றில் நாயகியாக நடிகை திரிஷா நடிக்கவிருக்கிறார். இப்படத்தை இயக்குனர் அஹமது இயக்குகிறார். இப்படம் காதல், காமெடி அனைத்தும் கலந்ததாக இருக்கும். இப்படத்தை கோடையில் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் திரிஷா தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் அஹமது நடிகர் ஜெய்-ஐ வைத்து வாமணன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments