கர்ணன், குடியிருந்தகோயில் இன்று ரிலீஸ்: தியேட்டர்களில் திரண்ட எம்.ஜி.ஆர்.-சிவாஜி ரசிகர்கள்!!!

Friday, March 16, 2012
சிவாஜியின் ‘கர்ணன்’ படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நவீனபடுத்தப்பட்டு சென்னையில் இன்று ரிலீசானது. சத்யம், எஸ்கேப், சாந்தி, சங்கம், அபிராமி, பி.வி.ஆர். உள்ளிட்ட பல தியேட்டர்களில் திரையிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சிவாஜி படத்துக்கு போட்டியாக எம்.ஜி.ஆரின் ‘குடியிருந்த கோயில்’ படம் ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ட்ஸ் தியேட்டரில் இன்று திரையிடப்பட்டது. எம்.ஜி.ஆர். சிவாஜி ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர்களில் திரண்டார்கள்.

கர்ணன் படம் திரையிட்ட தியேட்டர்களில் சிவாஜி ரசிகர்கள், பேனர் கொடி தோரணம் கட்டினார்கள். சிவாஜியின் கட்அவுட்களும் வைத்தார்கள். சாந்தி தியேட்டரில் ஒரு ரசிகர் நாவில் சூடம் கொளுத்தி வழிபட்டார். படம் பார்க்க வந்தவர்களுக்கு இனிப்புகளும் வழங்கினார்.

எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அதற்கு போட்டியாக குடியிருந்த கோயில் படம் ரிலீசான உட்லண்ட்ஸ் தியேட்டரில் எம்.ஜி.ஆரின் கட்அவுட் வைத்து பேனர், கொடி தோரணம் கட்டினர். பட்டாசுகளும் வெடித்தார்கள்.

ராயபுரம் இரா. ஆனந்தன், எல். கலைவாணன், எம்.பூபாலன், முரளி, வெங்கட் உள்ளிட்ட எம்.ஜி.ஆர். ரசிகர்கள் டிக்கெட் எடுக்க கியூவில் நின்றவர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

Comments