விஸ்வரூபத்துக்காக காத்திருக்கும் ஆதிபகவன்!!!

Saturday, March, 31, 2012
கமல்ஹாசனின் தீவிர ரசிகரான டைரக்டர் அமீர், அவரை வைத்து எப்படியாவது படம் பண்ண வேண்டும் என்று முனைப்போடு, அவரின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்து வருகிறார். இந்த தவம் இப்போது ஆரம்பமானது அல்ல, அமீரின், 'ஆதிபகவன்' படத்திற்கு முன்பு இருந்தே தொடர்கிறதாம். ஆனால் கமல்ஹாசன் அப்போது 'விஸ்வரூபம்' படத்திற்கான பிஸியில் இருந்ததால் முடியவில்லையாம். இப்போது கமல்ஹாசன் 'விஸ்வரூபம்' படத்தினை முடிக்கும் தருவாயில் இருக்கிறார். இதனால் மீண்டும் அவரை அணுக திட்டமிட்டு வருகிறார் அமீர். இதுகுறித்து அமீர் கூறியுள்ளதாவது, என்னுடைய 'ஆதிபகவன்' படத்தை முடித்த பிறகு, கமல்ஹாசனை வைத்து படம் இயக்க திட்டமிட்டேன். இதுதொடர்பாக ஏற்கனவே அவரிடம் பேசி இருக்கிறேன். இரண்டு-மூன்று கதைகள் கூட அவரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் இருவரும் எங்களது பட வேலைகளில் பிஸியாக இருந்ததால் அதுபற்றி தொடர்ந்து பேச முடியவில்லை. இப்போது நானும் எனது 'ஆதிபகவன்' படத்தை முடிக்க இருக்கிறேன். கமலும், 'விஸ்வரூபம்' படத்தை முடிக்க உள்ளார். ஆகையால் விரைவில் கமலை சந்தித்து அடுத்தபடம் குறித்து பேச இருக்கிறேன் என்று கூறியுள்ளார்

Comments