மாற்றான் - சூர்யா, கே.வி.ஆனந்தின் மாற்றாந்தாய் மனப்பான்மை!!!

Tuesday, March 13, 2012
தமிழ்நாட்டில் தாயே தமிழே என்பவர்கள் ஆந்திரா சென்றால் அப்படியே மாறிவிடுவதை பார்த்திருக்கிறோம். எனக்கு தமிழ் ரசிகர்களைவிட ஆந்திரா ரசிகர்களையே பிடிக்கும் என்று ஒருமுறை கார்த்தி கலாய்த்தது நினைவிருக்கலாம். நடிகைகளும் தெலுங்கு சினிமா என்றால் தங்களது அல்டாப் வாலை சுருக்கிக் கொள்வார்கள். அதேபோலொரு சம்பவம்.

மாற்றான் படத்தின் கதையையோ, புகைப்படத்தையோ தமிழ் மீடியாவின் கண்ணில் காட்டாத சூர்யாவும், கே.வி.ஆனந்தும் ஹைதராபத் சென்று ஸ்பெஷல் பிரஸ்மீட் நடத்தியிருக்கிறார்கள். ஒரு நேரடி தமிழ்ப் படத்தின் முதல் பிரஸ்மீட்டை தெலுங்குதேசத்தில் நடத்தியது வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாக இருக்கும்.

மாற்றான் தமிழ்ப் படம். இதனை மொழிமாற்றம் செய்துதான் தெலுங்கில் வெளியிட இருக்கிறார்கள். அப்படியிருக்க தெலுங்குக்கு முதல் ம‌ரியாதை செய்திருக்கிறார்கள் நமது பச்சைத் தமிழர்கள். இப்படியொரு செயலை தெலுங்கு நடிகர் ஒருவர் செய்திருந்தால் ஆந்திராவே அவரை புறக்கணித்திருக்கும். தெலுங்கில் மாற்றானுக்கு டூப்ளிகேட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ச‌ரியாகதான் வைத்திருக்கிறார்கள் நமது டூப்ளிகேட் தமிழர்கள்.

Comments