
கனிமொழி படத்தை தெலுங்கில் வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகை சோனா வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழில் சோனா தயாரித்த படம் கனிமொழி. ஆனால் சரியாகப் போகவில்லை.
இந்தப் படத்தை தெலுங்கில் டப் செய்து, 'லவ் ஜர்னி' என்ற பெயரில் வெளியிட முயற்சி நடந்து வருகிறது. இதற்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் யுனிக் புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் உரிமைரான நடிகை சோனா மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், "நடிகர் ஜெய் நடிக்கும் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் தயாரித்து வந்தது. படத்தை முடிக்க முடியாததால், என்னை அணுகினர்.
படத் தயாரிப்புக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்தேன்; அதன் உரிமையை, விலைக்கு வாங்கினேன். 'கனிமொழி' என்கிற பெயரில் படம் வெளியானது. படத்தை வெளியிட்டேன்; பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
தற்போது, இப்படத்தை தெலுங்கு மொழியில், டப்பிங் செய்வதற்கான நடவடிக்கைகளில், அம்மா கிரியேஷன்ஸ் ஈடுபட்டுள்ளது. இதற்கு என் ஒப்புதலை பெறவில்லை. 'லவ் ஜர்னி' என்கிற பெயரில் படத்தை வெளியிட உள்ளனர். இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்", என்று குறிப்பிட்டுள்ளார்.
மனுவை நீதிபதி வாசுகி விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் தங்கசிவன் ஆஜரானார். விசாரணையை வரும் 27ம் தேதிக்கு நீதிபதி வாசுகி தள்ளி வைத்துள்ளார்.
Comments
Post a Comment