பத்து நாள் விஷாலுக்கு... பத்து நாள் என்டிஆருக்கு - த்ரிஷாவின் கால்ஷீட் மேனேஜ்மென்ட்!!!

Friday, March 2, 2012
த்ரிஷாவுக்குப் படங்களே இல்லை என்று ஒரு பக்கம் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இதோ கல்யாணம் என்கிறார்கள்.

ஆனால் இரண்டையுமே வெற்றிகரமாகப் பொய்யாக்கி வருகிறார்.

இப்போது அவர் இரண்டு பெரிய படங்களில் படு பிஸி. ஒரு படம் தெலுங்கில். ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக.

இன்னொரு படம் தமிழில் விஷாலுக்கு ஜோடியாக. படத்தின் பெயர் சமரன்.

இரண்டு படங்களும் வெவ்வேறு இடங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. எப்படி சமாளிக்கிறார்?

இதுபற்றி த்ரிஷா கூறுகையில், "அது ரொம்ப சிம்பிள்... பத்து நாட்கள் விஷாலுடன் தமிழ் படத்திலும் பத்து நாட்கள் ஜூனியர் என்.டி.ஆருடன் தெலுங்கு படத்திலும் மாறி மாறி நடித்துக் கொடுக்கிறேன். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கிறது.

பத்து வருடங்களுக்கு மேல் நடிக்கிறேன். இப்போது வரைக்கும் என் அழகு குறையவே இல்லை என்று பார்த்தவர்கள் சொல்கின்றனர்.

காரணம், அழகை எப்படி பாதுகாக்கவேண்டும் என்ற ரகசியம் எனக்கு தெரியும். அதற்காக நிறைய கஷ்டப்படுகிறேன்.

அதே நேரம் மேக்கப் போடுவதில் ஆர்வம் இல்லை. சினிமா தவிர பொது நிகழ்ச்சிகளுக்கு மேக்கப் இல்லாமல் செல்லவே பிடிக்கிறது," என்றார்.

Comments