ஸ்டிரைக் பிரச்னையால் பாரதிராஜா பட கதை மாற்றம்!!!

Saturday, March, 31, 2012
கோலிவுட்டில் நிலவும் ஸ்டிரைக் காரணமாக பாரதிராஜா பட கதை திடீரென மாற்றப்படுகிறது. அன்னக்கொடியும் கொடி வீரனும் என்ற படத்தை பாரதிராஜா இயக்கி வருகிறார். இதில் இயக்குனர் அமீர் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். கார்த்திகா, இனியா ஹீரோயின். இதன் ஷூட்டிங் தொடங்கி நடந்து வந்தது. இந்நிலையில் பெப்சி, தயாரிப்பாளர்களுக்கு இடையே சம்பள பிரச்னை எழுந்தது. இதையடுத்து பட ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டது. தற்போது தயாரிப்பாளர்கள், ஏப்ரல் மாதம் வரை ஷூட்டிங் நடைபெறாது என அறிவித்ததுடன் மே 2ம் தேதி முதல் புதிதாக தொடங்க உள்ள தொழிலாளர்கள் சங்கத்துடன் இணைந்து படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதற்கு பெப்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஹீரோ மாற்றம், பெரியாறு அணை பிரச்னையால் கேரளாவில் ஷூட்டிங்கிற்கு தடை, திரையுலக பிரச்னையால் அன்னக்கொடி.. படத்தின் ஷூட்டிங் பல்வேறு வகையில் பாதிக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து ஷூட்டிங் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் பட ஹீரோ அமீர் சம்பள பிரச்னை விவகாரத்தில் பெப்சி அமைப்புக்கு ஆதரவாக உள்ளார். இதனால் படத்த¤லிருந்து அவரை பாரதிராஜா நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதை படக்குழு மறுக்கிறது. இப்படத்தின் கதையை 2 ஆக பிரிக்க பாரதிராஜா முடிவு செய்துள்ளார். கார்த்திகா, புதுமுக ஹீரோ நடிக்கும் காதல் கதையாக ஒரு படமும், அமீர், இனியா நடிக்க மற்றொரு படமாக அன்னக்கொடி... பட கதையை பிரித்துவிட்டார். முதலில் கார்த்திகா பட ஷூட்டிங் தொடங்க உள்ளது. அதன்பிறகு அமீர் நடிக்கும் படத்தை படமாக்க திட்டமிட்டிருக்கிறார் பாரதிராஜா என்கிறது படக்குழு.

Comments