Friday, March 09, 2012 12
சென்னை::காத லன் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், நடிகை அல்போன்சாவை கைது செய்யும் திட்டத்தை போலீசார் கைவிட்டனர். இதனால், காதலனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா, தனது கணவர் நோபலை விட்டு பிரிந்து விருகம்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவரது காதலன் வினோத்குமார். அல்போன்சாவுக்கு வயது 32. ஆனால் வினோத்குமாருக்கு வயது 26. சுமார் 6 வயது இளையவரை அல்போன்சா காதலித்து வந்தார்.
இந்நிலையில், அல்போன்சா வீட்டில் வினோத்குமார் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணைக்கு பயந்துபோன அல்போன்சாவும் 32 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். தீவிர சிகிச்சைக்கு பிறகு நேற்று வீடு திரும்பினார் அல்போன்சா. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவல்கள் வருமாறு:
நானும் வினோத்குமாரும் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். எனக்கு விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தோம். இதுகுறித்து அவரது பெற்றோரிடமும் பேசினார். ஆனால் திருமணத்துக்கு அவர்கள்தான் எதிர்ப்பு தெரிவித்தனர். நாங்கள் இருவரும் கடந்த 9 மாதமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறோம். ஒரே அறையில்தான் தூங்குவோம். என்னுடைய மகனைக்கூட தன் மகனாகவே பார்த்து கவனித்துக் கொண்டார். நான் துபாய் நடன நிகழ்ச்சிக்கு சென்றபோது கூட என் மகனை நன்றாக பார்த்துக் கொண்டார். அவருக்கும் வருமானம் இல்லை. இதனால் செலவுக்கு பெற்றோரை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. பலமுறை அம்மாவிடம் பணம் வாங்கி வந்து செலவு செய்தோம்.செலவுக்கு கஷ்டமாக இருந்ததால் மீண்டும் நடிக்க முடிவு செய்திருந்தேன். நாங்கள் சந்தோசமாகத்தான் இருந்தோம். ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.
இவ்வாறு போலீசில் அல்போன்சா கூறினார். வினோத்குமார் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. ஆனால், தற்கொலைக்கு அல்போன்சா தூண்டினாரா என்று போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கான எந்த ஆதாரமும் போலீசுக்கு கிடைக்கவில்லை. வினோத்குமாரின் கடிதம் கூட இல்லை. அதனால் வினோத்குமார் தற்கொலை வழக்கில் நடிகையை கைது செய்யும் முடிவை போலீசார் கைவிட்டனர்.
அதே நேரத்தில், தற்கொலைக்கு முயன்றதாக நடிகை அல்போன்சா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கில் தற்கொலைக்கு முயன்றவரை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதனால் அந்த வழக்கிலும் போலீசார் கைது செய்யும் முடிவையும் கைவிட்டனர். இதனால் இரு வழக்கிலும் கைது செய்யும் முடிவை போலீசார் கைவிட்டனர். இந்த தகவல் தெரிந்ததால், வினோத்குமாரின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
21 சவரன் நகை எங்கே? வினோத்குமார் தந்தை புகார்
வினோத்குமாரின் தந்தை பாண்டியன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 4ம் தேதி நள்ளிரவு ஒரு மணியளவில், வினோத்குமார் செல்போனில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் எடுத்து பேசியபோது, எதிர்முனையில் நடிகை அல்போன்சா, ‘உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டார்’ என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். நாங்கள் பதறியபடி சென்றோம்.
அங்கு என்னுடைய மகன் சடலம் கார் பார்க்கிங்கில் கிடத்தப்பட்டிருந்தது. மூக்கு, வாய் பகுதியில் ரத்தம் இருந்தது. அவன் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்தபோது, அங்குள்ள சுவற்றில் பல இடங்களில் ரத்தக்கறை படிந்திருந்தது. மேலும், அவனது தலையிலும் காயம் இருந்தது. எனவே, என் மகன் சாவில் மர்மம் உள்ளது.
இதுதொடர்பாக ராபர்ட், அல்போன்சா, அவருடைய அம்மா ஆகியோர் மீது சந்தேகம் உள்ளது. அவர்கள்தான் வினோத்தை கொலை செய்திருக்க வேண்டும். இதுதொடர்பாக 3 பேரையும் கைது செய்ய வேண்டும். என் மகன் எப்போதும் 12 சவரனில் முறுக்கு செயின், 2 சவரன் மோதிரம், 7 சவரன் பிரேஸ்லெட் என 21 சவரன் நகை அணிந்திருப்பான். அந்த நகைகள் மாயமாகி உள்ளது. இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.

Comments
Post a Comment