டைரக்டரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோயினாக லட்சுமிராயை தேர்வு செய்து ‌இருக்கிறார்!!!

Sunday, March 11, 2012
டைரக்டரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தன்னுடைய அடுத்த படத்திற்கு ஹீரோயினாக லட்சுமிராயை தேர்வு செய்து ‌இருக்கிறார். எஸ்.ஜே.சூர்யா படம் என்றாலே இஞைர்கள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும். வாலி, குஷி, நியூ என்று தொடர் ஹிட் படங்களாக கொடுத்து வந்த எஸ்.ஜே.சூர்யா திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். ஒரு சில படங்களில் ஹீரோவாக வலம் வந்தார். சமீபத்தில் ஷங்கரின் நண்பன் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் தோன்றினார். இப்போது மீண்டும் டைரக்ஷ்ன் பொறுப்பு ஏற்று இருக்கிறார்.

விரைவில் இசை என்ற பெயரில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தை இயக்கி நடிப்பதுடன் படத்தின் இசையமைப்பு பொறுப்பையும் முதன்முறையாக ஏற்று இருக்கிறார். இந்நிலையில் படத்திற்கு ஏற்ற கதாநாயகியை தேடிவந்தார் எஸ்.ஜே.சூர்யா. இதற்காக பல்வேறு மாநிலங்களில் சுற்றி திரிந்த அவருக்கு கடைசியாக பளிச்சிட்ட முகம் லட்சுமிராய் தான். உடனே அவரையே ஹீரோயின் ஆக்கிவிட்டார்.

சமீபத்தில் தமிழில், லட்சுமிராய் நடித்த காஞ்சனா மற்றும் மங்காத்தா படங்கள் இரண்டும் சூப்பர் ஹிட்டாகின. ஆனாலும் அவருக்கு தமிழில் படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இப்போது எஸ்.ஜே.சூர்யா பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பொதுவாக எஸ்.ஜே.சூர்யா பட ஹீரோயின்கள் அனைவரும் முன்னணி ஹீரோயின்களாக (சிம்ரன், ஜோதிகா) வலம் வந்தவர்கள். அந்த அதிர்ஷ்டம் லட்சுமிராய்க்கும் தொடருமா...? பொறுத்திருந்து பார்ப்போம்!!

Comments