
சென்னை::சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க மறுத்தது ஏன்?’ என்று டாப்ஸி விளக்கினார். ‘ஆடுகளம்’ படத்தில் அறிமுகமானவர் டாப்ஸி. இவர் கூறியதாவது: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘மாற்றான்’ படத்தில் நடிக்க முதலில் என்னை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்தனர். நானும் காத்திருந்தேன். ஆனால் என்ன காரணத்தாலே அந்த வாய்ப்பு வரவே இல்லை. எனவே சூர்யாவுடன் ஜோடியாக நடிக்க மறுக்கவும் இல்லை, அதை ஏற்பதற்கான வாய்ப்பும் வரவில்லை என்பதுதான் நிஜம். ‘கோலிவுட்டில் நம்பர் 1 நடிகையாக வராதது ஏன்?’ என்கிறார்கள். தெலுங்கு, இந்தி படங்களிலும் நான் நடித்து வருகிறேன். அதில்கூட ஒரே நாளில் நான் பெரிய ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றுவிடவில்லை. படிப்படியாகவே எனது வளர்ச்சி அமைந்திருக்கிறது. எனக்கு இன்னும் வயது இருக்கிறது. சினிமாவுலகை விட்டு இப்போதைக்கு விலகிவிடப்போவதில்லை. எனக்கென்று ஒரு நேரம் வரும் அப்போது நல்ல இடத்தை பிடிப்பேன். இந்தியில் ‘சாஸ்மி பத்தூர்’ என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்தி எனது தாய்மொழி என்பதால் இப்படத்தில் நடிக்கும்போது எந்த டென்ஷனும் இல்லாமல் நடிக்கிறேன். தெலுங்கில் ‘குண்டல்லோ கோதாரி’ படத்தில் நடிக்கிறேன். 1980களில் நடக்கும் கதை. அதற்கு ஏற்ப எனது காஸ்ட்யூம், நடிப்பு அமைந்திருக்கும். கிராமத்து பெண்ணாக நல்லது எது, கெட்டது எது என்று தெரியாத வேடம். இதில் எனது கதாபாத்திரத்தை நடித்து முடித்துள்ளேன். தமிழிலும் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.
Comments
Post a Comment