மலேசியா பாண்டியனா... யாருன்னே தெரியாதே! - ஸ்ரேயா!!!

Thursday, March 08, 2012
சென்னை::யாருன்னே தெரியாத மலேசியா பாண்டியன் என்பவர் என்வர் என் மீது வழக்கு தொடர்வதாக மிரட்டுவதா என ஆவேசப்பட்டுள்ளார் ஸ்ரேயா.

மம்முட்டி, பிருதிவிராஜ், ஸ்ரேயா நடித்த 'போக்கிரி ராஜா' என்ற மலையாள படம் தமிழில் 'ராஜா போக்கிரி ராஜா' என்ற பெயரில் டப் செய்யப்பட்டுள்ளது. தமிழில் வெளியிடுபவர் மலேசியா பாண்டியன்.

இந்த நிலையில், அதன் மலையாள தயாரிப்பாளரான தாமஸ் ஆன்டணி மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தில், நடிகை ஸ்ரேயா ஒரு புகார் கொடுத்தார்.

அதில், "'போக்கிரி ராஜா படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டபோதே அந்த படத்தை வேறு மொழிகளில் 'டப்' செய்யக்கூடாது'' என்று ஒப்பந்தம் செய்து கொண்டேன். அந்த ஒப்பந்தத்தை தாமஸ் ஆன்டணி மீறிவிட்டார். எனவே அந்த படத்தை தமிழ் உள்பட வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அந்த புகாரில் ஸ்ரேயா கூறியிருந்தார்.

இதற்கு தாமஸ் ஆன்டணி பதிலளிக்கவில்லை. ஆனால் மலேசியா பாண்டியன் என்பவர் பதில் கூறியிருந்தார்.

"என் படத்தை தடை செய்ய முயற்சிப்பவர்கள் மீது கோர்ட்டில் நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன்'' என்று அவர் கூறியிருந்தார். மேலும் ஸ்ரேயா மீது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்) யில் மலேசியா பாண்டியன் புகார் செய்தார்.

இதுபற்றி நடிகை ஸ்ரேயாவிடம் கேட்டபோது, "போக்கிரி ராஜா (மலையாள) படம் தொடர்பாக எனக்கும், தாமஸ் ஆன்டணிக்கும் இடையேதான் ஒப்பந்தம் இருக்கிறது. மலேசியா பாண்டியன் யார் என்றே எனக்கு தெரியாது. அவருடன் நான் ஒப்பந்தம் செய்து கொள்ளவில்லை.

அப்படி தெரியாத நிலையில், என் மீது அவர் வழக்கு தொடருவதாக மிரட்டுவதா? இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்,'' என்றார்.

Comments