
கோச்சடையான் மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் உருவாகிறது. இதனால் நீங்கள் லொகேஷனுக்கு செல்லத் தேவையில்லை. அழுவது முதல் எதிரி மீது பாய்வது வரை எல்லாவற்றையும் ஸ்டுடியோவில் செய்தால் போதும். உங்கள் ரியாக்சனை கேப்சர் செய்து உங்களைப் போல் உருவாக்கியிருக்கும் அனமேஷன் உருவத்தில் அதனை ஏற்றிவிடுவார்கள். திரையில் பார்க்கும் போது எல்லாமே நிஜம் போலிருக்கும்.
கோச்சடையான் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இம்மாதம் படப்பிடிப்பை தொடங்கு முடிவு செய்துள்ளனர். அதற்காக ரஜினி லண்டன் செல்கிறார். இதனை ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தெரிவித்தார்.
Comments
Post a Comment