
கரண் நடித்துள்ள புதிய படம் கந்தா. பாபு விஸ்வநாத் இயக்கியுள்ளார். இதில் காமெடி வேடத்தில் விவேக் நடித்துள்ளார். நில அபகரிப்புகளை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது.
பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியரின் நிலத்தை அபகரித்துள்ளவர்களுடன் கதாநாயகன் மோதுவதுபோல் கதை சித்தரிக்கப்பட்டு உள்ளது. இப்படத்தில் வடிவேலு, சிங்கமுத்துவின் நில அபகரிப்பு சர்ச்சைகளும் காட்சிபடுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
வடிவேலு மீது கோர்ட்டில் நில அபகரிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இருவரையும் விவேக் கேலி செய்வதுபோல் காட்சிகள் வைத்திருப்பதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து விவேக்கிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
கந்தா படத்தில் ரியல் எஸ்டேட் பிரச்சினையை வைத்து காமெடி செய்து இருப்பது உண்மைதான். ஆனால் வடிவேலு, சிங்கமுத்து தகராறுக்கு முன்பே இப்படம் முடிந்துவிட்டது. காமெடி சீன்கள் படமான பிறகே இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அவர்களுக்கும் படத்தில் இடம் பெறும் காமெடிக்கும் சம்பந்தம் இல்லை. இதை வடிவேலுவிடமும் விளக்கி விட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இயக்குனர் பாபு கே.விஸ்வநாத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
படத்தில் விவேக் நிலங்களை விலைக்கு வாங்குபவராகவும் அவரிடம் மற்றவரின் நிலங்களை ஏமாற்றி விற்கும் டுபாக்கூர் புரோக்கராக செல்முருகனும், நடித்துள்ளனர். இவை வடிவேலு, சிங்கமுத்து நில பிரச்சினை போன்று இருக்கலாம். ஆனால் யாரையும் தனிப்பட்ட முறையில் குற்றம் சாட்டுவதுபோல் காமெடியை எடுக்கவில்லை. போலீசின் என்கவுண்டரே படத்தின் பிரதான கதையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment