நடிப்பு வராததால் பாலா படத்தில் இருந்து நீக்கமா? - வேதிகா!!!

Saturday, March, 31, 2012
அதர்வாவை நாயகனாக வைத்து “பரதேசி” என்ற படத்தை இயக்கி வருகிறார் பாலா. இதில் நாயகியாக வேதிகாவை ஒப்பந்தம் செய்து இருந்தார். முதல் கட்ட படப்பிடிப்பில் வேதிகா பங்கேற்று நடித்து முடித்துள்ளார். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் நடக்க உள்ளது.

இந்த நிலையில் வேதிகாவை படத்தில் இருந்து திடீரென நீக்கி விட்டதாக வதந்தி பரவியுள்ளது. வேதிகா இதுவரை நடித்த காட்சிகளை பாலா பார்த்த போது திருப்தி ஏற்படவில்லையாம். சரியாக நடிக்கவில்லை என்று அவர் நடித்த காட்சிகள் அனைத்தையும் வெட்டி எறிந்து விட்டதாகவும் அத்துடன் படத்தில் இருந்தும் அவரை நீக்கி விட்டு புதிதாக பூஜாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி வேதிகாவிடம் கேட்டபோது மறுத்தார். பாலா படத்தில் இருந்து என்னை நீக்கியதாக வதந்தி பரப்பப்பட்டு உள்ளது. அவர் படத்தில் நான் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்க இருக்கிறேன்.

பாலா படத்தில் நடிப்பது மறக்க முடியாத அனுபவமாக உள்ளது. என்னைப்பற்றி ஏன் இப்படி கிசு கிசுக்கள் பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. இவ்வாறு வேதிகா கூறினார்.

Comments