வித்யாபாலன் போல் என்னால் கவர்ச்சி காட்ட முடியாது: அசின்!!!

Friday, March 23, 2012
வித்யாபாலன் போல் என்னால் கவர்ச்சியாக நடிக்க முடியாது’ என்றார் அசின்.இதுகுறித்து அவர் கூறியதாவது:
நான் எப்போதும் பாதுகாப்பான நிலையை விரும்புகிறேன். அதை கவனத்தில் கொண்டுதான் ஒன்றுக்கும் அதிகமான ஹீரோயின் நடிக்கும் படங்களில் நடிக்கிறேன். மற்ற நடிகைகளுடன் நடிக்கும்போது எனது தொழில் பாதிக்காது. ஏனென்றால் எனக்கு யாருடனும் ஈகோ கிடையாது. அதனால்தான் இந்தியில் வாய்ப்பு கிடைத்தபோது நடிக்க ஒப்புக்கொண்டேன். நடிகைகள் ஒருபோதும் ஒத்துப்போகமாட்டார்கள் என்ற எண்ணம் நிலவுகிறது. என்னுடன் நடித்தவர்கள் இன்னும் நட்பாகவே இருக்கிறார்கள். மற்ற நடிகைகளுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் அது கதாபாத்திரத்தை பொறுத்தது. படம் பார்ப்பவர்களுக்கு சந்தோஷத்தை தருவதாக என் பாத்திரம் அமைய வேண்டும் என்பது முக்கியம்.

தமிழில் நடிக்க மறுத்ததில்லை. ‘காவலனு’க்கு பிறகு எனக்கு நல்ல கேரக்டர் அமையவில்லை. ‘டாப்சி, காஜல் அகர்வால் போன்றவர்கள் இந்தியில் அறிமுகமானதால் போட்டியா?’ என்கிறார்கள். தினமும் நிறையபேர் இந்தியில் அறிமுகமாகிறார்கள். ஆனால் குறிப்பிட்ட நட்சத்திரங்களுக்கு யாரும் போட்டி கிடையாது. எல்லோரும் திறமையானவர்கள். யாரும் யாருக்கும் போட்டி கிடையாது. ‘டர்ட்டி பிக்சரில் வித்யா பாலன் கவர்ச்சியாக நடித்ததுபோல் நடிப்பீர்களா?’ என்கிறார்கள். அதுபோல் என்னால் கவர்ச்சியாகவும், துணிச்சலாகவும் நடிக்க முடியாது. அப்படிப்பட்ட பாத்திரங்கள் எனக்கு பொருந்தாது.இவ்வாறு அசின் கூறினார்.

Comments