Friday, March, 30, 2012
எங்கேயும் எப்போதும் படத்துக்குப் பிறகு அஞ்சலி மீதான மதிப்பு மாறியிருக்கிறது. எந்தக் கேரக்டரையும் பண்ணக் கூடியவர் லிஸ்டில் நிரந்தர இடம் பிடித்துள்ளார் இந்த சின்சியர் நடிகை. அழகு, கிளாமர், நடிப்பு... முக்கூட்டணி சங்கமிக்கும் அஞ்சலியின் திரையுலகப் பார்வை, அவரின் கேரியர் ஆகியவை குறித்து அவரே பேசுகிறார்.
எங்கேயும் எப்போதும் மணிமேகலை குறித்து என்ன நினைக்கிறீங்க?

இயக்குனர் என்ன சொன்னாரோ அதை நான் செய்தேன். படத்தின் வெற்றி திருப்தியளித்தது. அங்காடித்தெரு கனி கதாபாத்திரத்துக்குப் பிறகு எனக்கு திருப்தியளித்த வேடம் என்றால் அது எங்கேயும் எப்போதும் மணிமேகலைதான்.
மீண்டும் அதே தயாரிப்பு கம்பெனியில் நடிக்கிறீர்களே...?
மீண்டும் அதே தயாரிப்பு கம்பெனியில் நடிக்கிறீர்களே...?
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சாருக்கு தாங்க்ஸ். அவர்தான் நான் மீண்டும் அதே கம்பெனியில் நடிப்பதற்கு காரணம். அவரின் அசிஸ்டெண்ட் டைரக்டர் கின்ஸ்லே படத்தை இயக்குகிறார். முருகதாஸ் சாரோட தம்பி சரவணன் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
சுந்தர் சி. யோட மசாலா கஃபே எந்த மாதிரியான கதை?
சுந்தர் சி. யோட மசாலா கஃபே எந்த மாதிரியான கதை?
அதுவொரு ரொமாண்டிக் காமெடி. ரொம்ப நல்லா வந்திருக்கு. விமல், சிவான்னு இரண்டு ஹீரோக்கள். நான் ஷெல்த் இன்ஸ்பெக்டராக நடிச்சிருக்கேன். இன்ட்ரஸ்டிங் கேரக்டர்.
தெலுங்கிலும் நடிக்கிறீங்களே...?
தெலுங்கிலும் நடிக்கிறீங்களே...?
ஆமா. வெங்கடேஷ், மகேஷ் பாபு இரண்டு பேரும் சேர்ந்து நடிக்கிற சீதாம்மா வாகிட்லே சிறிமல்லு செட்டுங்கிற படத்துல நடிக்கிறேன். அங்கயெல்லாம் இவங்களை மாதிரியான மாஸ் ஹீரோக்கள் இணைந்து நடிக்கிறது அபூர்வம். இதில் நான் வெங்கடேஷ் ஜோடியாக நடிக்கிறேன். இதிலும் எனக்கு நல்ல கேரக்டர்.
FILEபெரிய ஹீரோக்களுடன் நடிக்கலைங்கிற வருத்தம் இருக்கிறதா?
வெங்கடேஷும், மகேஷ் பாபும் பெரிய நடிகர்கள்தானே. அது மட்டுமில்லாம அந்தப் படத்தின் பெயரில் வர்ற சீதாம்மா என்கிற கேரக்டர்லதான் நான் நடிக்கிறேன். வெங்கடேஷ், மகேஷ்பாபு போன்ற பெரிய நடிகர்களின் படத்தின் பெயரே என்னுடைய கேரக்டர் பெயார்தான். இதைவிட என்ன வேண்டும்.
சரி, பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் போதே அறிமுக இயக்குனர்களின் படங்களுக்கும் கால்ஷீட் தருகிறீர்கள்...?
சரி, பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் போதே அறிமுக இயக்குனர்களின் படங்களுக்கும் கால்ஷீட் தருகிறீர்கள்...?
அங்காடித்தெரு கனி, எங்கேயும் எப்போதும் மணிமேகலை மாதிரி உங்களால மட்டுமே பண்ணக் கூடிய கேரக்டர்னு வர்றாங்க. அதே மாதிரி நடிப்பும் கிளாமரும் சேர்ந்த கேரக்டர் அதை உங்களால மட்டும்தான் செய்ய முடியும் என்று சொல்லும் போது தவிர்க்க முடிவதில்லை.
காதல் கிசுகிசு...?
காதல் கிசுகிசு...?
ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால் உடனே காதலா? மீடியாக்காரர்களே ஏதாவது எழுதிவிட்டு என்னிடமே விளக்கம் கேட்கிறார்கள். அவர்கள் எழுதியதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்.
காதல்... திருமணம்...?
காதல்... திருமணம்...?
அதைப் பற்றியெல்லாம் யோசிக்க நேரமில்லை. நான் ரசிச்சு நடிக்கிறதுக்கான கேரக்டர்கள் இன்னும் இரண்டு வருஷத்துக்கு இருக்கிறது. அதையெல்லாம் முடித்த பிறகு நீங்க சொல்வதைப் பற்றி யோசிக்கலாம்.
Comments
Post a Comment