கோவா திரைப்பட விழாவில் தமிழ் பட ஹீரோயின் தேர்வு!!!

Thursday, March 15, 2012
கோவா பட விழாவில் சந்தித்தவரை ஹீரோயினாக தேர்வு செய்தேன் என்றார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.
சாமுராய் ‘காதல், ‘கல்லூரி படங்களை அடுத்து பாலாஜி சக்திவேல் இயக்கும் படம் வழக்கு எண் 18/9. இப்படம் பற்றி அவர் கூறியதாவது:
வழக்கமான மசாலா படங்கள் இயக்குவதில் எனக்கு ஆர்வம் கிடையாது. ஒரு படம் இயக்கினாலும் மாறுபட்ட திரைக்கதையுடன் இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அந்த வகையில்தான் ‘வழக்கு எண்... படம் உருவாகிறது. இப்படத்தின் மத்திய மற்றும் கிளைமாக்ஸ் காட்சியை எழுதி முடித்துவிட்டேன். ஆனால் தொடக்க காட்சியை எப்படி அமைப்பது என்பதற்கு ஒரு வருடம் ஆனது. இதில் ஸ்ரீ, மிதுன்முரளி, ஊர்மிளா, மினிஷா என புதுமுகங்கள் நடிக்கின்றனர். கோவாவில் நடந்த சர்வதேச பட விழாவிற்கு சென்றபோது ஊர்மிளாவை சந்தித்தேன். புனே திரைப்பட கல்லூரி மாணவி. தங்கப்பதக்கம் வென்றவர். நடிப்புக்கான சான்றிதழ் காட்டி தனது நடிப்பு ஆர்வத்தை வெளிப்படுத்தினார். வேடத்துக்கு பொருத்தமாக இருந்ததால் தேர்வு செய்தேன். மற்ற நட்சத்திரங்களும் நடிப்பு தேர்வுக்கு பிறகே தேர்வாகினர். இப்படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார். ‘காதல்Õ படத்தை இவர்தான் தயாரிப்பதாக இருந்தது. அதற்காக தனுஷிடம் கதை சொல்வதற்கு இருவரையும் மலேசியா அனுப்பி வைத்தார். ஆனால் அது ஈடேறவில்லை. அந்த படத்தை மிஸ் செய்ததையடுத்து இப்படத்தை அவருக்காக இயக்குகிறேன். பிரசன்னா இசை. விஜய் மில்டன் ஒளிப்பதிவு.

Comments