
சித்தார்த், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா நடித்து திரைக்கு வரவுள்ள ஸ்ரீதர் என்ற படத்திற்காக நட்புக்கில்லை எல்லை என்ற பாடல் பாடி இருக்கிறார் சிம்பு.
ஒளிப்பதிவாளர் ரமேஷ் இயக்கும் புதிய படத்தில் வினய் ஜோடியாக ஆண்டிரியா ராய் நடிக்கிறார். விபத்தில் வினய் கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்றுவருவதால் ஏப்ரலில் தொடங்க இருந்த இதன் ஷூட்டிங் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழில் நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடிக்கும் சமந்தா அப்படத்தின் இந்தி பதிப்பிலும் நடிக்க உள்ளார். ஏற்கனவே இந்த வேடத்துக்கு சோனம் கபூரிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது.
நான் ஈ படத்தில் நடிக்கும் ஹீரோ நானிக்கு விரைவில் காதல் திருமணம் நடக்க உள்ளது.
கமல் நடிக்கும் படத்தை இயக்க பேச்சு நடத்துகிறார் அமீர்.
Comments
Post a Comment