மாற்றுத்திறனாளி அபிநயாவை ஹீரோயினாக்க தடை போட்டனர்!!!

Thursday, March 08, 2012
மாற்றுத்திறனாளி அபிநயாவை ஹீரோயினாக்க பலர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றார் அவரது தந்தை ஆனந்த். Ôநாடோடிகள்Õ படத்தில் அறிமுகமானவர் அபிநயா. இவர் காது கேளாத, வாய் பேச முடியாதவர். அவரை பற்றி அவரது தந்தை ஆனந்த் கூறியது: அபிநயா பிறந்த 30 நாட்களுக்குள் அவருக்கு காது கேட்காது என்பதை உணர்ந்தோம். 3 வயது வரை அவரால் நடக்க முடியவில்லை. பின்னர் டாக்டர்கள் அளித்த பயிற்சியை அடுத்து நடக்க தொடங்கினார். உடல் ரீதியான குறைபாடுகள் சில சமயம் அவரை காயப்படுத்தினாலும் எதையும் எதிர்கொள்ளும் எண்ணம் வளர்த்துக்கொண்டார். பாஸிடிவ் எண்ணங்களால் தனது குறைபாடுகளை வென்றார். பின்னர் மாற்றுதிறனாளி பள்ளியில் சேர்ந்து உதட்டசைவு மூலம் பேசும் பயிற்சி பெற்றார். Ôநாடோடிகள்Õ படத்தில் அவரை ஹீரோயினாக்க இயக்குனர் சமுத்திரக்கனி எண்ணியபோது பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை நடிக்க வைத்தால் காட்சிக்கு ஏற்ப நடிக்கத் தெரியாது. முகபாவனைகள் செய்ய தெரியாது, வேலை வாங்குவது பெரிய கஷ்டம் என்று பலர் கூறினார்கள். அவரை வைத்து படம் எடுப்பது ரிஸ்க் என்றனர். ஆனால் சமுத்திரக்கனி யாருடைய பேச்சையும் ஏற்கவில்லை. அபிநயாவை நடிக்க வைக்க முடியும் என்று தனக்கு முழுநம்பிக்கை இருப்பதாக கூறியதுடன் அதை செயலிலும் காட்டினார். தனக்கு வழங்கப்பட்ட கேரக்டரை முழுமையாக உள்வாங்கிக்கொண்ட அபிநயா அந்த வேடத்தை நிறைவாக செய்து முடித்தார். எந்த வேடத்தையும் அவரால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை அவர் மற்றவர்களுக்கு வரவழைத்திருக்கிறார். தன்னுடைய எல்லையை அவர் உணர்ந்திருக்கிறார். அதற்கு ஏற்ப திறமையை வெளிப்படுத்துவார்.

Comments