Sunday, March 04, 2012
கோ படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ராதாவின் மகள் கார்த்திகா தற்போது தமிழில் கிராமத்து பெண்ணாகவும், தெலுங்கில் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாகவும் கலந்து கட்டி நடித்துக் கொண்டிருக்கிறார்.
கோ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் முன்னாள் நாயகி ராதாவின் மூத்த மகள் கார்த்திகா. முதல் படமே அவருக்கு முத்திரையைப் பதித்து விட்டதால் ஏக டிமாண்ட் ஏற்பட்டது. இருப்பினும் நல்ல கதைக்காக அம்மாவும், மகளும் காத்திருந்தனர்.
அப்படி வந்ததுதான் பாரதிராஜாவின் அன்னக்கொடியும், கொடி வீரனும்.அம்மா ராதாவை இயக்கிய நானே, மகள் கார்த்திகாவையும் இயக்குகிறேன் என்று பாரதிராஜாவே பெருமையாக கூறியுள்ளார். இப்படத்தில் கிராமத்து நாயகியாக நடிக்கிறார் கார்த்திகா. தனது அம்மாவுக்கு பெயர் வாங்கித் தந்த முதல் மரியாதை போல இப்படமும் தனக்குப் பெரும் பெயர் பெற்றுத் தரும் என்பது கார்த்திகாவின் நம்பிக்கை. படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயர் தான் அன்னக்கொடி.
தமிழில் இப்படி கிராமத்துப் பெண்ணாக வலம் வரப் போகும் கார்த்திகா, தெலுங்கில் தம்மு என்ற படத்தில் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
ஒரே நேரத்தில் கிராமத்து பெண்ணாகவும், அல்ட்ரா மாடர்ன் பெண்ணாகவும் நடிக்கும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்துவிடாது. நான் தமிழில் பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அன்னக்கொடியாக நடித்துள்ளேன். அதில் அன்னக்கொடியின் மழலைப்பருவம், பதின், மங்கை மற்றும் முதிர் பருவம் என்று 4 விதமான கதாபாத்திரங்களில் வாழ்ந்துள்ளேன்.
அதே சமயம் தெலுங்கில் தம்மு என்ற படத்தில் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக நடிக்கிறேன் என்றார். தம்மு படத்தில் நம்ம ஊர் திரிஷாதான் நாயகி என்பது தெரியும்தானே.
எப்படி நடிச்சால் என்ன, ரசிக்கும்படி நடிச்சா சரிதான்...!

Comments
Post a Comment