நடிகை ஷகிலா இன்று நெல்லை கோர்ட்டில் ஆஜராகிறார்!!!

Friday, March 2, 2012
நெல்லை: ரொம்ப காலமாக நிலுவையில் உள்ளஷ ஆபாசப்படத்தில் நடித்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகை ஷகிலா இன்று நெல்லை கோர்ட்டில் ஆஜராகிறார்.

பாளையங்கோட்டையில் உள்ள சினிமா தியேட்டரில் கடந்த 2003ம்ஆண்டு ஆகஸ்ட் 27ம்தேதி "இளமை கொண்டாட்டம்' என்ற பெயரில் ஆபாசப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தில் அனுமதிக்கப்பட்ட 'அளவை' விட அதிகமாக ஆபாசம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் தியேட்டருக்குள் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் ஆபாச படச் சுருள் கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாக தியேட்டர் மேலாளர் பாஸ்கரன், ஆபரேட்டர்கள் பரமசிவன், வசீகரன், ஊழியர்கள் சிவசுப்பிரமணியன், சுப்பிரமணியன், முருகன், மாரிமுத்து, தாமஸ் மற்றும் ஆபாசப்படத்தில் நடித்ததாக நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நெல்லை ஜே.எம்.1 கோர்ட்டில் நடந்துவருகிறது. வழக்கில் தொடர்புடைய நடிகை ஷகிலா உட்பட 9 பேருக்கும் குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று நெல்லை ஜே.எம்.1 கோர்ட்டில் நடக்கிறது. இந்த வழக்கில் நடிகை ஷகிலா உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜராகின்றனர்.

ஷகீலா வருவதையொட்டி கோர்ட்டில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments