ஆர்யாவின் புதுமனை புகுவிழாவில், நடிகை நயன்தாரா!!!

Tuesday, March 20, 2012
நடிகர் ஆர்யாவின் புதுமனை புகுவிழாவில், நடிகை நயன்தாரா கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றினார். ஆர்யாவுக்கு சென்னை அண்ணாநகரில் ஏற்கனவே சொந்தமாக வீடு இருக்கிறது. அதில், அவர் தனது தாயார் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். இப்போது அவர், சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில், 2 ஆயிரம் சதுர அடியில் ஒரு வீடு வாங்கியிருக்கிறார். புதுமனை புகுவிழாவை அவர் ஆடம்பரம் இல்லாமல், எளிமையாக நடத்தினார். நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து இருந்தார். இந்த விழாவுக்கு ஆர்யாவினால் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தவர், நடிகை நயன்தாரா. இவர்தான் புதுமனை புகுவிழாவில் குத்துவிளக்கேற்றினார். பிரபுதேவாவை பிரிந்தபின் நயன்தாரா சென்னை வருவது, இது இரண்டாவது முறை. இதற்கு முன்பு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் தானே புயல் நிவாரண நிதி வழங்குவதற்காக சென்னை வந்தார். அதன்பிறகு அவர் ஆர்யா வீட்டின் புதுமனை புகுவிழாவுக்காக இப்போது சென்னை வந்திருக்கிறார். நடிகர் விஷால், பட அதிபரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் ஆர்யாவின் புதுமனை புகுவிழாவுக்கு வந்திருந்தார்கள். விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு ஆர்யா விருந்து கொடுத்தார். அடடே... குடும்ப குத்துவிளக்கே குத்துவிளக்கேத்துச்சாம்... கொடுமடா!

Comments