Wednesday,March,28,2012
பாரதிராஜாவின் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் அமீர் இல்லை என்பது உறுதியாகிவிட்டது. மாறாக அவருக்கு பதில் பாரதிராஜாவின் வாரிசான மனோஜ் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் இமயம் பாரதிராஜா தன்னுடைய கனவு படமான அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தை தேனியில் உள்ள தனது சொந்த கிராமத்தில் இயக்கி வருகிறார். "கோ" கார்த்திகா, இனியா ஆகியோருடன் புதுமுகம் லெட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தில் கட்டுவிரியன் எனும் அமீர் கேரக்டருக்கு மட்டும் ஆரம்பத்தில் இருந்தே பஞ்சாயத்து நீடிக்கிறது. முன்னதாக அமீர் கேரக்டரில் பார்த்திபன் தான் நடிப்பதாக இருந்தார். ஆனால் ஏனோ தெரியவில்லை அவர் விலக அமீரை தேர்ந்தெடுத்து போட்டோ சூட் எல்லாம் நடத்தி, அதில் திருப்தியடைந்து படத்தில் பாதி காட்சியையும் படமாக்கி முடித்து விட்டார் பாரதிராஜா.
இந்நிலையில் பெப்சி தொழிலாளர்கள் சம்பள பிரச்னையில் தயாரிப்பாளர்களுக்கும், அமீருக்கு முட்டல் மோதல் இருந்து வருகையில், அந்த மோதல் பாரதிராஜாவிடமும் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அமீர் இப்படத்தில் இருந்து விலக போவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது அமீர், இப்படத்தில் இருந்து விலகியிருப்பது உறுதியாகிவிட்டது. இதனை பாரதிராஜாவே தெரிவித்துள்ளார். மேலும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் கதையில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் காரணமாக அமீர் இப்படத்தில் நடிக்கவில்லை என்றும், எனது அடுத்த படத்தில் அமீர் நிச்சயம் இடம்பெறுவார் என்றும் மற்றபடி அமீர் நீக்கத்திற்கான காரணம் பெப்சி தொழிலாளர் சம்பள பிரச்னை இல்லை என்றும் கூறியுள்ளார்.
இதனிடையே அமீருக்கு பதிலாக, அந்த கேரக்டரில் தனது வாரிசான மனோஜை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம் பாரதிராஜா. அதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்பதால், அமீரின் கேரக்டரில் யார் நடிக்க போகிறார் என்பது இன்னும் குழப்பமாகவே இருக்கிறது.

Comments
Post a Comment