பாட்டுக்காகத் தான் படத்துக்கே வந்தோம்- கொலவெறி ரசிகர்கள் கொண்டாட்டம்!!!

Saturday, March, 31, 2012
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஷ்வர்யா இயக்கத்தில் சூப்பர்ஸ்டாரின் மருமகன் தனுஷும், உலகநாயகன் கமல்ஹாஸனின் மகள் ஸ்ருதியும் ஜோடியாக நடித்த படம் 3. இந்தியாவின் பிரபல நட்சத்திரங்களின் வாரிசுகள் ஒன்றாக இணைந்த இந்த படத்திற்கு தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

படத்திலுள்ள கொலவெறி பாடல் பெற்ற புகழினால் இந்தியா முழுவதும் பெரிதும்
எதிர்பார்க்கப்பட்டது இந்த படம். தமிழில் மட்டும் தயாரான இந்த படம் இந்தி, தெலுங்கு என பரவியது கொலவெறிப் பாடலால் தான். இன்று(30.03.12) ரிலீஸான இந்த படத்தை பற்றி தியேட்டரை விட்டு வெளியே வந்த ரசிகர்களிடம் கருத்து கேட்ட போது “படம் பரவாயில்லை.

படம் எப்படி இருந்தால் என்ன? நாங்கள் பாடல்களை எதிர்பார்த்துத் தான் வந்தோம் நாங்கள் எதிர்பார்த்தது போல் பாடல்கள் நன்றாக வந்துள்ளன. இன்னும் நிறைய எதிர்பார்த்தோம். ஆனாலும் பரவாயில்லை. வொய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி.....” என்று பாட்டு பாடிக்கொண்டே பேசினார்கள்.

Comments