Friday, March 09, 2012 12
மும்பை::தாறுமாறாக பைக் ஓட்டி 2 இளைஞர்களை காயப்படுத்திய வழக்கில் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் இன்று மும்பையில் கைது செய்யப்பட்டார்.
பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆப்ரகாம் கடந்த 2006ம் ஆண்டு மும்பையில் படுவேகமாக பைக் ஓட்டிச் சென்று 2 இளைஞர்கள் மீது மோதினார். இதில் 2 இளைஞர்களும், அவரும் காயமைடந்தனர். இதையடுத்து ஜான் அந்த 2 இளைஞர்களையும் மருத்துவமனையில் சேர்த்தார்.
இது குறித்த வழக்கு பந்த்ரா மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் கவனக்குறைவு மற்றும் தாறுமாறாக மோட்டார் சைக்கிளை ஓட்டிய குற்றத்திற்காக ஜான் ஆப்ரகாமிற்கு 15 நாள் சிறைத் தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த நீதிமன்றம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று கூறிவிட்டது. இதையடுத்து அவர் ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி ஜானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் இன்று மும்பையில் கைது செய்யப்பட்டார்.

Comments
Post a Comment