மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்க நிபந்தனைகள் போட்டதால் திவ்யா நீக்கம்!!!

Wednesday,March,14,2012
மம்மூட்டிக்கு ஜோடியாக நடிக்கும் படத்துக்கு அதிக சம்பளத்துடன் ஏகப்பட்ட நிபந்தனைகள் போட்டதால் திவ்யா நீக்கப்பட்டார். மலையாளத்தில் மம்மூட்டி நடிக்கும் Ôதப்பனாÕ. இப்படத்துக்கு ஹீரோயினாக நடிக்க பலரிடம் பேசப்பட்டது. கால்ஷீட் பிரச்னையால் சில நடிகைகள் மறுத்துவ¤ட்டனர். தமிழ், கன்னட படங்களில் நடித்து வரும் திவ்யாவிடம் கேட்டபோது, நடிக்க ஒப்புக்கொண்டார். இதனால் அவரிடம் கால்ஷீட் வாங்குவது சம்பந்தமான முதல் கட்ட பேச்சுவார்த்தையை படக்குழு முடித்தது. அதன் பின் சம்பளம் தொடர்பாக பேசப்பட்டபோதுதான் தயாரிப்பாளருக்கு திவ்யா அடுத்தடுத்து அதிர்ச்சிகளை தந்தார். தயாரிப்பாளர் சொன்ன தொகையை விட 2 மடங்கு அதிகமாக சம்பளம் கேட்டாராம் திவ்யா. அத்துடன் எந்த ஊரில் ஷூட்டிங் நடத்தினாலும் பைவ் ஸ்டார் ஓட்டல்களில் தங்க வைக்க வேண்டும். கேரவன் வேண்டும், உதவியாளர்களுக்கு குறிப்பிட்ட சதவீதம் பேட்டா, தனி மேக்கப் மேன் என திவ்யாவின் நிபந்தனைகள் பட்டியல் நீண்டு கொண்டே சென்றதாம். இதனால் தயாரிப்பாளர் மிலன் ஜலீல், திவ்யாவை படத்திலிருந்து நீக்க¤விடலாம் என கூற, இயக்குனரும் சம்மதித்துவிட்டார். இதையடுத்து சமீரா ரெட்டியிடம் படக்குழு பேசியிருக்கிறார்கள். அவரும் அதிக சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. இறுதியில¢ தெலுங்கில் மார்க்கெட் இழந்த சார்மியை தேர்வு செய்துள்ளனர்.

Comments